110-இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்த சாம்சங்.! அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலை.!
சாம்சங் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் புதிய புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர இந்நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது.

அதன்படி சாம்சங் நிறுவனம் 110-இன்ச் மைக்ரோ-எல்இடி டிவி மாடலை இப்போது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக அட்டகாசமான வடிவமைப்புடன் சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த 110-இன்ச் எல்இடி டிவி.

தற்சமயம் சாம்சங் நிறுவனத்தின் இந்த பிரமாண்ட 110 இன்ச் மைக்ரோ-எல்இடி டிவி மாடல் கொரிய சந்தையில் பிரீ-சேல் செய்யப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு வாக்கில் இந்த டிவி சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக 2018 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் 146-இன்ச் அளவில் தி வால் எனும் டிவி மாடலை அறிமுகம் செய்து இருந்தது. எனினும், இது மாட்யூலர் வடிவில் பிரத்யேகமாக இன்ஸ்டால் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால் புதிய 110-இன்ச் மாடல் வழக்கமான டிவி போன்று எளிதில் இன்ஸ்டால் செய்ய முடியும்.

இந்த புதிய 110-இன்ச் மைக்ரோ-எல்இடி டிவி மாடலில் மைக்ரோமீட்டர் அளவு கொண்ட எல்இடி லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. பின்பு இதில் உள்ள மைக்ரோ-எல்இடி-க்கள் தரமான பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனவே இது நீண்டகாலம் உழைக்கும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த டிவி மாடலில் 4கே எச்டிஆர் தரவுகளை இயக்கும் வசதி இடம்பெற்றுள்ளது. இதன் டிஸ்பிளேவில் இருந்து பிளாக் மேட்ரிக்ஸ் மற்றும் பெசல்கள் கழற்றப்பட்டுவிட்டதாக சாம்சங் தெரிவித்து உள்ளது. பின்பு இதில் உள்ள மல்டி-வியூ அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் 55 இன்ச் அளவில் நான்கு வெவ்வேறு தரவுகளை பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்த டிவி 5.1 சேனல் சவுண்ட் வசதியை கொண்டிருக்கிறது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாம்சங் 110-இன்ச் எல்இடி டிவி மாடலின் விலை 156,400 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1.15 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications