டிவி வைக்க தனியா இடம் வாங்கனும் போல..110-இன்ச் டிவியை அறிமுகம் செய்ய Samsung.! விலையை சொன்னா நம்புவீங்களா?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் சிறந்த தரமான அம்சங்களுடன் இந்நிறுவனம் சாதனங்களை அறிமுகம் செய்கிறது.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் 110-இன்ச் மைக்ரோ எல்இடி டிவியை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக வியக்க வைக்கும் விலையில் மேம்பட்ட புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த சாம்சங் 110-இன்ச் மைக்ரோ எல்இடி டிவி ஆனது பிரீமியம் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த டிவியை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தும் வகையில் நேர்த்தியான வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும் இந்த டிவி 24.8 மில்லியன் மைக்ரோமீட்டர் அளவிலான சிறிய LED-களைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்.
மைக்ரோ எல்இடிஇ மைக்ரோ கான்ட்ராஸ்ட், மைக்ரோ கலர், மைக்ரோ எச்டிஆர் மற்றும் மைக்ரோ ஏஐ பிராசஸர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 110-இன்ச் டிவி. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
சாம்சங் நிறுவனம்.
அதேபோல் சாம்சங் 110-இன்ச் மைக்ரோ எல்இடி டிவியில் உள்ள மைக்ரோ எல்இடி தொழில்நுட்பம் ஆனது ப்ரைட்நஸ் அளவை அதிகரிக்கும் மற்றும் துல்லியமான வண்ணங்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த டிவியின் உதவியுடன் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும். அனைவரும் விரும்பும் வகையில் இதன் டிஸ்பிளே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் 110-இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் ஆனது சோலார்செல் ரிமோட் உடன் வருகிறது, இது மினிமலிஸ்டிக் (minimalistic) கீகளுடன் கூடிய நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ரிமோட்டில் பேட்டிரி இல்லை என்றும், இன்டோர் லைட்டிங் மூலம் இதை சார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் 110-இன்ச் டிவி டால்பி அட்மோஸ் (Dolby Atmos)ஆடியோ அம்சத்துடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிவியின் டாப் சேனல் ஸ்பீக்கர்கள் வழியாக 3D சரவுண்ட் சவுண்ட்-ஐ உறுதிசெய்கிறது சாம்சங் நிறுவனம். எனவே இந்த சாம்சங் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
அதேபோல் மைக்ரோ எல்இடி ஆர்ட் மோட் மற்றும் அம்பியன்ட் மோட்+ போன்ற மேம்படுத்தப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 110-இன்ச் சாம்சங் டிவி. எனவே பயனர்களுக்குப் பிடித்த டிஜிட்டல் புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட புகைப்படங்களைக் இதில் காட்சிப்படுத்த முடியும். குறிப்பாக இது சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

சாம்சங் 110-இன்ச் மைக்ரோ எல்இடி டிவியின் அனைத்து அம்சங்களும் மிகவும் அருமையாகவே உள்ளது. ஆனால் இந்த டிவியின் விலை தான் சற்று உயர்வாக இருக்கிறது. அதாவது இந்த 110-இன்ச் சாம்சங் டிவி ரூ.1,14,99,000-ஆக உள்ளது. மேலும் சாம்சங் இணையதளத்தில் இந்த டிவி விற்பனைக்கு வருகிறது.
அதேபோல் சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் 6.5-இன்ச் Super AMOLED டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, எக்ஸிநோஸ் 1280 சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.17,000-விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








