Home
Gadgets

இதை தான் நைட்டு பூரா உக்காந்து ஒட்டுனீங்களா? அறிமுகமாகும் முன்பே அடி வாங்கும் புதிய Nothing இயர்பட்ஸ்!

உங்களால மாறு வேஷத்துக்கு உண்டான மரியாதை போச்சே டா.. என்று கூறும் அளவிற்கு நத்திங் (Nothing) நிறுவனம் ஒரு பங்கமான வேலையை பார்த்துள்ளது. கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நத்திங் இயர் 2 தொடர்பாக வெளியான சில தகவல்கள் நத்திங் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியள்ளது.

நத்திங் நிறுவனத்தின் அடுத்த ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸ், வருகிற மார்ச் 22 ஆம் தேதியன்று இந்தியா உட்பட உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் குறிப்பிட்ட இயர்பட்ஸின் டிசைன் மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி நத்திங் ரசிகர்களின் கடுப்பை கிளப்பி உள்ளது.

அறிமுகமாகும் முன்பே அடி வாங்கும் புதிய Nothing Ear 2 இயர்பட்ஸ்!

ஏனென்றால்.. Nothing Ear 2-வின் வடிவமைப்பு அப்படி!

புதிய நத்திங் இயர் 2 இயர்பட்ஸின் வடிவமைப்பானது "அச்சு அசலாக" பழைய நத்திங் இயர் 1-ஐ போலவே உள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் - டிசைன் அடிப்படையில் - இந்த இரண்டிற்கும் இடையே உள்ள ஒரே ஒரு வித்தியாசம் பெயர் மட்டும் தான்.

பழைய மாடலில் இயர் (1) என்று பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது; புதியதில் இயர் (2) என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது மரு வைத்தால் போதும், அது மாறுவேஷமாகி விடும் என்கிற பாணியில் பெயரை மட்டும் மாற்றிவிட்டு அதே செமி-டிரான்ஸபிரெண்ட் டிசைன் (Semi Transparent Design) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவொன்றும் அவ்வளவு மோசமான விஷயம் இல்லை என்றாலும் கூட இதுவொரு பிரீமியம் இயர்பட்ஸ் என்பதை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் வாங்கும் பணத்திற்காகவாவது அல்லது இரண்டிற்கும் இடையேயான வேறுபாட்டை எளிதாக கண்டுபிடிக்க உதவும்படி, நத்திங் இயர் 2-வின் வடிவமைப்பில் ஒரு சில மாற்றங்களாவது செய்யப்பட்டு இருக்கலாம்!

Nothing Ear 2 அம்சங்களாவது அப்கிரேட் செய்யப்படுமா?

நத்திங் இயர் 2-வின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை, ஆக அதன் அம்சங்களிலும் கூட பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் இதுவரை கிடைத்த எல்லா தகவல்களுமே நத்திங் இயர் 2-வில் சில முக்கியமான பிரீமியம் அம்சங்கள் இடம்பெறும் என்று பரிந்துரைக்கின்றன.

ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid ANC)

நத்திங் இயர் 2-வின் முக்கிய அம்சங்களில் ஹைப்ரிட் ஏஎன்சி-யும் ஒன்றாகும். இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பேக்கிரவுண்ட் நாய்ஸ்-ஐ திறம்பட குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இதன் இயர்பட்ஸ் ஒவ்வொன்றும் 4.5 கிராம் என்கிற அளவிலான எடையை மட்டுமே மட்டுமே கொண்டிருக்கும். அதாவது இயர் 1-ஐ விட 0.2 கிராம் எடை குறைவாக இருக்கும்.

ஐபி54 ரேட்டிங் (IP54 ரேட்டிங்) மற்றும் அட்வான்ஸ்டு இக்யூ (Advanced EQ)

நத்திங் இயர் 2 இயர்பட்ஸானது நீர் தெறிப்பு மற்றும் வியர்வை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பை வழங்கக்கூடிய ஐபி54 ரேட்டிங்குடன் வரலாம். மேலும் இது ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களுடன் கனெக்ட் செய்வதற்கான ஆதவரையும் வழங்கலாம். இது அட்வான்ஸ்டு ஈக்யூ என்கிற அம்சத்தையும் கொண்டு வரலாம். இது சவுண்ட் ஆப்ஷன்களை கஸ்டமைஸ் செய்ய உதவுமொரு அம்சமாகும்.

Nothing Ear 2 விலை மற்றும் விற்பனை

நத்திங் இயர் 2-வின் இந்திய விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது ரூ.7000 க்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் இயர் 1 ரூ.6,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நத்திங் இயர் 2-வின் விற்பனை தேதியானது, மார்ச் 22 ஆம் தேதி நடக்கும் அறிமுகத்திற்கு பின்னரே அறிவிக்கப்படும்.

Photo Courtesy: Onleaks and The Tech Outlook / Carl Pei Twitter Page

More from GizBot

Best Mobiles in India

English summary
Same Design But Premium Features Nothing Ear 2 Launch Date March 22 Check Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X