"அவென்ஜர்ஸ்" ஸ்டைல் "உருமறைப்பு" திறன் கொண்ட ரஷ்யா போர் சாதனங்கள் அறிமுகம்.!
அவென்ஜர்ஸ் திரைப்படத்தில் வரும் கட்சி போல, மறையும் போர் சாதனங்களை ரஷ்யாவிற்காக உருவாகியுள்ளது ஒரு நிறுவனம். ஷீயீல்டு இயக்கத்தின் பறக்கும் போர் கப்பல் வானில் பறந்து மறைந்துவிடும், அந்தக் காட்சியை பார்த
அண்மையில் மாஸ்கோவில் நடந்த ஆர்மி 2018 ஃபோறம் விழாவில் ரஷ்யா பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்ரான ரோஸ்டெக் நிறுவனம் காமோஃபிலெஜ் ஹெல்மெட் ஒன்றைப் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த காமோஃபிலெஜ் ஹெல்மெட் இன் ப்ரோட்டோடைப் பற்றி ரோஸ்டெக் நிறுவனம் கூறியது என்னவென்றால் "ஹெல்மெட் இல் பொருத்தப்பட்டுள்ள தனிச் சிறப்பு மின்சக்தியால் இயக்கப்படும் மின்பொருள், ஹெல்மெட்டின் மேற்பரப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு அதன் நிறத்தை மாற்றிக் கொண்டு அடுத்த நொடியே மறைந்துவிடும்" என்று கூறியுள்ளது.

கெமோஃபிலெஜ் ஹெல்மெட்
இந்த கெமோஃபிலெஜ் ஹெல்மெட் இன் ப்ரோட்டோடைப் பற்றி ரோஸ்டெக் நிறுவனம் கூறியது என்னவென்றால் "ஹெல்மெட் இல் பொருத்தப்பட்டுள்ள தனிச் சிறப்பு மின்சக்தியால் இயக்கப்படும் மின்பொருள், ஹெல்மெட்டின் மேற்பரப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு அதன் நிறத்தை மாற்றிக் கொண்டு அடுத்த நொடியே மறைந்துவிடும்" என்று கூறியுள்ளது.

கெமோஃபிலெஜ்
இத்துடன் கூடுதல் விபரமாக, இந்த கெமோஃபிலெஜ் ஹெல்மெட் பொருள் வண்ண மாற்றங்களைக் காண்பிப்பதோடு சிக்கலான உருவகங்களை உருவகப்படுத்தவும் முடியும் என்று தெரிவித்துள்ளது. உதாரணத்திற்குக் காற்றில் இலைகள் அசையும் இயக்கத்தைக் கூட இது உருவகப்படுத்துமாம்.

ரோஸ்டெக் போர் விமானம்
இந்த புதிய பொருளைத் தனது அணைத்து சாதனங்களிலும் பயன்படுத்தப் போவதாக ரோஸ்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்தபடியாக போர் விமானம், போர் கப்பல் மற்றும் சீருடைகளில் இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் என்று தெரிவித்திருக்கிறது.

எக்ஸோ ஸ்கெலிடன்
ஏற்கனவே எக்ஸோ ஸ்கெலிடன்(exoskeletons) முயற்சில் வெற்றி பெற்ற ரோஸ்ட்ஸ்ச் நிறுவனம் தற்பொழுது அறிவித்திருக்கும் கெமோஃபிலெஜ் ஹெல்மெட் மற்றும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள புதுத் தொழில்நுட்ப பொருளின் விவரங்கள் பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்மி 2018 ஃபோறம் விழா
இந்த காமோஃபிலெஜ் ஹெல்மெட் பற்றிய வீடியோ ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் ரோஸ்டெக் நிறுவனம் ஆர்மி 2018 ஃபோறம் விழாவில் வெறும் வாய்ப் பேச்சிற்காக இதைப் பற்றி அறிமுகம் செய்திருக்காது என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications