Home
Gadgets

100 நாள் பேட்டரி, பில்ட்-இன் பிளாஷ் லைட், ஆனா பட்ஜெட் விலை.. இப்படி ஒரு Smartwatch க்கு தானே உலகமே வெயிட்டிங்!

ரோக்பிட் (Rogbid) என்கிற நிறுவனமானது அல்டரா லாங் பேட்டரி லைஃப் (Ultra-long battery life) மற்றும் வெளிப்புற பகுதிகளில் நீடித்து உழைக்கும் (Outdoor durability) டிசைன் ஆகியவை இரண்டையும் மையமாக கொண்ட அதன் முதல் ஸ்மார்ட்வாட்ச் (First Smartwatch) மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட் வாட்சின் மாடல் பெயர் ரோக்பிட் எண்டிரோ (Rogbid Enduro) ஆகும். இது 1100mAh பேட்டரியை கொண்டுள்ளது. ரோக்பிட் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது பிளூடூத் கால் மோட் (Bluetooth Call Mode) இல் 5 முதல் 7 நாட்கள் வரையிலான பயன்பாட்டையும், டெய்லி மோட் (Daily Mode) இல் 40 நாட்கள் பயன்பாட்டையும் மற்றும் 100 நாட்களுக்கு மேலான ஸ்டேண்ட்பை டைமையும் (Standby Time) வழங்கும்.

100 நாள் பேட்டரி, பில்ட்-இன் பிளாஷ் லைட், ஆனா பட்ஜெட் விலை!

ரோக்பிட் எண்டிரோ ஸ்மார்ட்வாட்ச்சின் மற்ற அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை எண்டிரோ ஸ்மார்ட் வாட்ச் ஆனது 1.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் (IPS Display) வருகிறது. இது 360 × 360 ரெசல்யூஷனை வழங்குகிறது. இதன் டிஸ்பிளே - நேரடி சூரிய ஒளியில் தெளிவாகவும், நன்கு தெரியும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இதன் டிஸ்பிளே - அவுட்டோர் நேவிகேஷன் (Outdoor Navigation), ஆக்டிவிட்டி டிராக்கிங் (Activity Tracking) மற்றும் நோட்டிபிகேஷன்களுக்கு (Notifications) ஏற்றதாக அமைகிறது. மேலும் ரோக்பிட் ஸ்மார்ட் வாட்ச் அணை MIL-STD-810H இராணுவ-தர நீடித்துழைப்புடன் கூடிய புல்-மெட்டல் பாடியை (Full Metal Body) கொண்டுள்ளது. இது வெப்பம், குளிர், தூசி மற்றும் ட்ராப்களுக்கான எதிர்ப்பை உறுதி செய்கிறது.

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்வாட்ச் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் (Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Spaker) மூலம் ப்ளூடூத் காலிங்கை (Bluetooth Calling) ஆதரிக்கிறது. மேலும் இது மணிக்கட்டில் இருந்து நேரடியாக கால்களை செய்யவும், பெறவும் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் காண்டாக்ட்களையும் 'சின்க்' (Sync) செய்கிறது

ஆண்ட்ராய்டு (Android) அல்லது ஐஓஎஸ் (iOS) போன் உடன் இணைக்கப்படும்போது மெசேஜ்கள் மற்றும் ஆப் நோட்டிபிகேஷன்களயும் வழங்கும். உடல்நலம் மற்றும் உடற்தகுதி தொடர்பான அம்சங்களை பொறுத்தவரை, எண்டிரோ ஸ்மார்ட் வாட்ச் ஆனது இதயத் துடிப்பு (Heart rate), இரத்த ஆக்ஸிஜன் அளவுகள் (Blood Oxygen Levels) மற்றும் தூக்கத்தின் தரத்தை (Sleep Quality) கண்காணிக்கிறது.

இதில் சுவாசப் பயிற்சிகள் மற்றும் ஓடுதல், நடைபயிற்சி மற்றும் டிரெட்மில் உடற்பயிற்சிகள் போன்ற பல ஸ்போர்ட்ஸ் மோட்களும் அடங்கும். ஸ்டெப் கவுன்ட்டர் (Step Counter), கலோரி டிராக்கர் (Calorie Tracker) மற்றும் டிஸ்டன்ஸ் மெஷர்மென்ட் சிஸ்டம் (Distance Mesaurement System) ஆகிய அம்சங்கள் - பயனர்கள் நாள் முழுவதும் தங்கள் செயல்பாட்டு நிலைகள் குறித்து அறிந்திருக்க உதவுகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி ரோக்பிட் ஸ்மார்ட்வாட்ச்சில் வெளிப்புற பயன்பாட்டை நோக்கமாக கொண்ட கூடுதல் அம்சங்களும் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்சில் உள்ளமைக்கப்பட்ட திசைகாட்டி (Compass) மற்றும் சக்திவாய்ந்த ஃப்ளாஷ்லைட்டும் (Poweful Flashlight) உள்ளது. மேலும் இது 5ATM நீர் எதிர்ப்பையும் வழங்குகிறது, இது மழை அல்லது நீச்சலின் போது பயன்படுத்த பாதுகாப்பானதாக அமைகிறது. ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோனும் நீர்ப்புகா திறனால் பாதுகாக்கப்படும்.

விலை மற்றும் விற்பனை: அமெரிக்க சந்தையில் ரோக்பிட் எண்டிரோவின் விலை $29.99 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2710 ஆகும். இது பிளாக், பிரவுன், ஆரஞ்சு மற்றும் கேமஃபிலாக் ஆகிய 4 கலர்களில் வாங்க கிடைக்கிறது. மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து தகவல் இப்போதைக்கு இல்லை; விவரங்கள் கிடைத்தால் உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Rogbid Enduro Smartwatch with 1100mAh battery 100 day standby Built in Flashlight Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X