Home
Gadgets

தொலைநோக்கு பார்வையில் எதிர்கால ரோபோட்கள்..!!

'ரோபோட்' எனும் வார்த்தையை செக் குடியரசை சேர்ந்த எழுத்தாளர் தான் 1921 ஆம் ஆண்டு முதன் முதலில் பயன்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக மின்சாரம் பயன்படுத்திய முதல் ரோபோட் வகையை வில்லியம் க்ரே வால்டர் 1948 ஆம் ஆண்டு கண்டறிந்தார் என கூறப்பட்டாலும், உலகின் முதல் ரோபோட் வகைகள் கிருஸ்து பிறப்புக்கு முன் (கி.மு) 400-350 காலங்களில் உருவாக்கப்பட்டது என சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்ய 'ரோபோட்' ராணுவப்படை, தயார்..!

இப்படி ரோபோட்களின் வரலாறு கி.மு காலங்களில் துவங்கி இன்று வரை ரோபோட்கள், பல விதங்களில் மக்களுக்கு பயன் தரும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதோடு வரும் ஆண்டுகளில் உலகளவில் ரோபோட்டிக்ஸ் சந்தை பல ஆயிரம் கோடிகளாக உயரும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கும் நிலையில் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ரோபோட்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஸ்மார்ட்போனுடன் இணைந்து செயல்படும் புதிய ரோபோட் கண்டுபிடிப்பு

பணி

பணி

மனிதர்களின் பணியை சுலபமாக்கும் ரோபோட்கள் சில ஆண்டுகளாக பயன்படாட்டில் இருந்து வருகின்றது.

மாற்று

மாற்று

ஜப்பான் போன்ற நாடுகளில் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் பிரத்யேக ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் தானாக சக்தியூட்டி கொள்ளும் தலைசிறந்த ரோபோட்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

Energetically Autonomous Tactical Robot

Energetically Autonomous Tactical Robot

இந்த வகை ரோபோட்கள் இலை, மற்றும் காய்கறி வகைகளில் இருந்து தானாக சக்தியை உருவாக்கி கொள்ளும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்களை கொண்டு இலை, செடி, கொடி மற்றும் கல், இரும்பு போன்றவைகளை பிரிக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

சக்தி

சக்தி

இந்த ரோபோட் தயாரிக்கும் சக்தியினை சைக்ளோன் எனப்படும் கம்பஷன் என்ஜினில் சேமித்து வைத்து கொள்ளும். இந்த சக்தியை மற்ற கருவிகள் மற்றும் பேட்டரிகளில் பயன்படுத்த முடியும்.

solar powered skate

solar powered skate

2 பவுண்டு எடை கொண்ட ஸ்கேட் டிரோன் மூலம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக சூரிய சக்தியை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சோலார் பவர்டு ஸ்கேட்

சோலார் பவர்டு ஸ்கேட்

இறக்கைகளில் சோலார் செல்களை கொண்டிருக்கும் இந்த டிரோனின் அடிப்பகுதியில் இன்ஃப்ராரெட் செல்கள் பொருத்தப்பட்டிருப்பதால் இரவு நேரங்களிலும் சக்தியை உருவாக்க முடியும்.

Sky Walker

Sky Walker

ஆள் இல்லாமல் இயங்கும் இந்த சிறிய விமானம் வானில் இருக்கும் அனைத்து சக்திகளையும் சேமிக்கும் திறன் கொண்டவை ஆகும்.

beamed power

beamed power

லேசர் சக்தியை மின்சாரமாக மாற்றும் விசேஷ சோலார் செல்களை கொண்ட விமானம் தரையில் இருக்கும் லேசர் மோட்டிவ் ஸ்டேஷன் மூலம் லேசர் சக்தியை பெறுகின்றது. இதன் மூலம் 10 மைல் தூரத்தில் இருக்கும் டிரோன்களுக்கு சக்தியூட்ட முடியும் என கூறப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Robots That Can Move and Power Themselves. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X