Home
Gadgets

இது ஸ்பேஸ் ஷட்டில் இல்ல.. Roborock மினி வாஷிங் மெஷின்.. 270ml டிடர்ஜென்ட் இருந்தா 50 நாள் துணி துவைக்கலாம்..

பார்ப்பதற்கு ஒரு குட்டி ஸ்பேஸ் ஷட்டில் போல காட்சியளிக்கும் இந்த சாதனம் ஒரு மினி வாஷிங்-மெஷின் (Mini Washing machine) டிவைஸ் மக்களே. இதுவொரு ஃபுல் ஆட்டோமேட்டிக் ஸ்மார்ட் மினி வாஷிங் மற்றும் ட்ரையிங் மெஷின் சாதனமாகும்.

ரோபோராக் (Roborock) என்ற நிறுவனம் இந்த ஸ்மார்ட் மினி வாஷிங் மற்றும் ட்ரையிங் மெஷின் எம்1 பியூர் (Roborock Smart Mini Washing and Drying machine M1 Pure) சாதனத்தை உருவாக்கியுள்ளது. இதுவொரு ஸ்மார்ட் ஹோம் கேட்ஜெட் சாதனமாகும். இது குறைந்தளவு துணிகளை மிகவும் சுத்தமாக சுத்தம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், உங்கள் வீட்டில் ஒரு சிறிய இடம் இருந்தால் போதும், இது கச்சிதமாக பொருந்திவிடும்.

இது ஸ்பேஸ் ஷட்டில் இல்ல.. Roborock மினி வாஷிங் மெஷின்.. விலை என்ன?

ரோபோராக் ஸ்மார்ட் மினி வாஷிங் மற்றும் ட்ரையிங் மெஷின் எம்1 பியூர் (Roborock Smart Mini Washing and Drying machine M1 Pure):

இந்த ரோபோராக் மினி வாஷிங் மெஷின் (Roborock Mini Washing Machine) சாதனம் வெறும் 1 கிலோ கொள்ளளவை கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த சாதனம் குழந்தைகளின் மெல்லிய துணிகளை (baby wear) பக்குவமாக துவைத்து, காயவைக்கும் (drying) படி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாம் தினசரி பயன்படுத்தும் உள்ளாடைகளை (underwear) கிருமிகள் இன்றி சுத்திகரிக்க இந்த ரோபோராக் மினி வாஷிங் மெஷின் சில பிரத்தியேக அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த மினி வாஷிங் மெஷின் (Mini washing machine) டைரக்ட் டிரைவ் மோட்டார் உடன் 45dB குறைந்த சத்தத்துடன் வருகிறது. இது சத்தமே இல்லாமல் இயங்குவதால், உங்கள் தூக்கம் கெடாது மற்றும் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்காது. இந்த சாதனம் உங்கள் துணிகளை மிகவும் பக்குவமாக கையாள்கிறது. இதனால், துணிகள் வேகமாக சேதமடைவதை தடுக்கமுடிகிறது. இந்த சாதனம் ஃபிரெஷ் கேள் டெக்னாலஜி (Fresh Gale Technology) தொழில்நுட்பத்துடன் வருகிறது.

இந்த ரோபோராக் ஸ்மார்ட் மினி வாஷிங் மற்றும் ட்ரையிங் மெஷின் எம்1 பியூர் (Roborock Smart Mini Washing and Drying machine M1 Pure) சாதனத்தில் நீங்கள் ஒரே நேரத்தில் 25 துணிகள் வரை துவைக்கலாம். இதில் உள்ள ஃபிரெஷ் கேள் 3D டிரைவிங் (Fresh Gale 3D Drying) உங்கள் துணிகளை வேகமாக உலரவைக்கிறது. இதில் உள்ள இன்டெக்ரேடட் சென்சார் துணிகள் உலரவைக்கப்பட்டதா என்பதை உறுதி செய்கிறது.

இது ஸ்பேஸ் ஷட்டில் இல்ல.. Roborock மினி வாஷிங் மெஷின்.. விலை என்ன?

270ml டிடர்ஜென்ட் இருந்தா 50 நாள் துணி துவைக்கலாமா? சூப்பர் மேட்டரா இருக்கே:

இந்த மினி வாஷிங் மெஷின் ஒரு நிமிடத்திற்கு 4000 முறை சுழற்சி செய்து, 18 km/h வேகத்தில் காற்றோட்டத்தை (airflow) உருவாக்கி துணிகளை வேகமாக ட்ரை செய்கிறது. இந்த வாஷிங் மெஷின் 30 நிமிடங்களில் காலி செய்யப்படவில்லை என்றால், இது தானாகவே செல்ஃப்-கிளீனிங் மோடை (Self-cleaning mode) ஆக்டிவேட் செய்து 90ºC காற்றை வழங்கி துணிகளை முழுமையாக உலரவைக்கிறது. இதில் ஆட்டோமேட்டிக் டிடெர்ஜென்ட் டிஸ்பென்சிங் அம்சமும் உள்ளது.

இந்த மினி வாஷிங் மெஷின் உடன் 270ml ஆட்டோமேட்டிக் டிடெர்ஜென்ட் டிஸ்பென்சிங் (automatic detergent dispensing) கம்பார்ட்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது 50 நாட்களுக்கு வரும் வகையில், இந்த வாஷிங் மெஷின் தானாக டிடெர்ஜென்ட்டை தேவையான அளவு மட்டும் எடுத்து பயன்படுத்திக்கொள்கிறது. அப்படியானால், 1 கிலோ டிடெர்ஜென்ட் (1kg detergent) வாங்கினால் 200 நாட்களுக்கு மேல் சிக்கனமாக நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி பார்க்கையில் 1 வருடத்திற்கு வெறும் 1.5கிலோ டிடர்ஜென்ட் போதுமானது.

இது முழுமையாக டச் கண்ட்ரோல் உடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், தற்போது ரோபோராக் நிறுவனம் இதை ப்ரீ-புக்கிங் செய்ய அனுமதிக்கிறது. இப்போதே இதை நீங்கள் ஆர்டர் செய்தால், இதன் விலை $277 டாலர் மட்டுமே. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 23,000 ஆகும். மே 31, 2024 ஆம் தேதிக்கு பிறகு ஆர்டர் செய்யும் பொழுது இதன் விலை $498 டாலர் என்று நிறுவனம் கூறியுள்ளது.

அதாவது, இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 41,000 ஆகும். தற்போது இந்த சாதனத்தை ரோபோராக் நிறுவனம் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது. இதை விரைவில் உலக நாடுகளுக்கும் அறிமுகம் செய்ய திட்டமிருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், இன்னும் சரியான இந்திய அறிமுகம் தேதி குறித்த விபரங்களை நிறுவனம் தெரிவிக்கவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Roborock Smart Mini Washing and Drying Machine M1 Pure Uses 270ml Detergent For 50 Days Check Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X