Just In
- 10 hrs ago
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!
- 11 hrs ago
அறிமுகத்துக்கு முன்பே வெளியான அம்சங்கள்: ரியல்மி 8 இப்படிதான் இருக்கும்!
- 11 hrs ago
டிக்டாக் போன்ற தளத்தில் Netflix அறிமுகம் செய்த புதிய 'ஃபாஸ்ட் லாஃப்ஸ்' அம்சம்..
- 11 hrs ago
சூப்பர் ஸ்டைலான Oppo Band Style அறிமுகம்.. Mi Band 5க்கு போட்டி இனி ஒப்போ பேண்ட் தானா?
Don't Miss
- News
தாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் வியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி
- Automobiles
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா? கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...
- Movies
சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா ?
- Sports
ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்!
- Finance
5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..!
- Lifestyle
ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதுமையான செக்யூரிட்டி கேமராவை அறிமுகம் செய்தது ரிங் நிறுவனம்.!
இதுவரை வீட்டிலோ அல்லது அலுவங்கங்களிலோ ஓரிடத்தில் பொருத்தி பயன்படுத்தப்பட்டு வந்தது கண்காணிப்பு கேமராக்கள்,ஆனால் ரிங் நிறுவனம் பறந்து கண்காணிக்கும் பாதுகாப்பு கேமராவை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது.

அதாவது ட்ரோன் எனப்படும் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறந்து கண்காணிக்கும் புதிய செக்யூரிட்டி கேமராவை ரிங் நிறுவனம் தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது யாரும் இல்லாத வீட்டில் இல்லாத நேரத்திலும், கட்டளையிட்டால் ஒவ்வொரு அறையாக பறந்து சென்று கண்காணிப்பை வழங்கும். ஒருவேளை வீட்டில் நீங்கள் ஸ்டவ்வை அணைக்க மறந்துவிட்டமோ,ஜன்னலை திறந்து வைத்து விட்டோமோ, கதவை பூட்டி விட்டோமோ என்பது போன்ற சாதாரண விஷயங்களை சரிபார்ப்பதற்கு கூட இந்த கேமராவை பயன்படுத்தலாம்.
IT ஊழியர்களுக்கு அசத்தலான அறிவிப்பு! IBM, Amazon, Walmart, TCS வெளியிட்ட தகவல் என்ன தெரியுமா?

மேலும் இந்த ரிங் நிறுவனத்தின் செக்யூரிட்டி கேமரா ஆனது எதன் மீதும் இடித்துக் கொள்ளாமல் பறக்கும் வகையிலான தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இண்டோர் கண்காணிப்பிற்கு பல கேமராக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக அதை ஒரு கேமராவின் மூலம் செய்வதே இந்த புதிய கருவியின் நோக்கம் என்று ரிங் நிறுவனத்தின் jamine siminoff தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் இந்த பறக்கும் கண்காணப்பு கேமராவின் விலை $ 249.99டாலர்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் பேட்டரி நன்மை, எவ்வளவு நேரம் வரை பறக்கும் என்பதை பற்றிய அறிவிப்பை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

மேலும் இந்த இந்த ரிங் நிறுவனத்தின் செக்யூரிட்டி கேமரா ஆனது பறக்கும் நிலையில் சத்தம் எழுப்புமா என்று கேள்வி பலருக்கும் வரும்? கண்டிப்பாக இது பறக்கும் போது சத்தம் எழுப்பும் என்று தகவல் கிடைத்துள்ளது, எனவே ரகசியமாக வீடியோக்களை பதிவு செய்ய முடியாது. ஒருவேளை சத்தம் எழுப்பாமல் இந்த சாதனம் பறக்கும் என்றால் கண்டிப்பாக அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்பு செக்யூரிட்டி கேமரா ஆனது 1080 பிக்சல் திர்மானத்தை கொண்டுள்ளது, மேலும் வீட்டு பாதுகாப்பு வணிகத்திற்கு பொறுப்பான அமேசானின் கீழ் உள்ள ரிங் பிரிவு, பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே உங்கள் வீடு முழுவதும் பறக்கும் கேமராவுடன் ஒரு ட்ரோனை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190