இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ரிக்கோ கலர் மல்டிஃபங்க்ஸ்னல் பிரிண்டர்..!

Written By:

இன்றைய உலகில் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது தினம் தினம் நாம் ஏதோ ஒரு மாற்றத்தை நாம் இந்த உலகில் பார்த்து கொண்டே தான் இருக்கிறோம், மேலும் இந்த மாற்றங்கள் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ரிக்கோ கலர் மல்டிஃபங்க்ஸ்னல் பிரிண்டர்.!

ஜப்பானிய நிறுவனம் ரிக்கோ இரண்டு புதிய மல்டிஃபங்க்ஸ்னல் பிரிண்டர் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் செயல்பாடுகள் பல்வேறு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வந்துள்ள ரிக்கோமாடல்கள் ஒன்று எம்பி சி307எஸ்பி மற்றும் இரண்டாவது எம்பி சி407எஸ்பி என்ற மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம்.தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த பிரிண்டரில் ஏ4 கலர் மல்டிஃபங்க்ஸ்னல் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, யுஐ பயன்பாடுகள் மற்றும் வயர்லெஸ் பிரிண்டரை உள்ளமைக்கின்றன இந்த ரிக்கோ பிரிண்டர்.

மொபைல், மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப்புகளிலிருந்து அனைத்துவிதமான பிரிண்ட் எடுக்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது, மேலும் இதை பயன்படுத்துவதற்க்கு மிக எளிமையாக இருக்கும் என அந்நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்பி சி307எஸ்பி பிரிண்டர் இதன் விலை ரூபாய். 2,12,200 ஆக உள்ளது மற்றும் எம்பி சி407எஸ்பி பிரிண்டர் விலை ரூபாய்.2,65,452ஆக உள்ளது.

இந்த ஸ்மார்ட் ஆபரேஷன் சாதனங்கள் 1.46ஜிகா ஹெர்ட்ஸ் இன்டெல் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதன் வேகம் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.Read more about:
English summary
Ricoh launches two new A4 colour multifunctional printers in India : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot