ரிகா இண்டியாவின் அதிநவீன புரஜொக்டர்கள் அறிமுகம்

மேம்பட்ட தொழில்நுட்பம், செயல்பாடு, மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை கொண்ட இந்த புரஜொக்டர்கள் குறித்து தற்போது பார்ப்போம்

By Siva
|

ஐடி துறையில் ஏற்கனவே புகழ்பெற்று விளங்கும் ரிகா இண்டியா (Richo India) நிறுவனம் தற்போது அதிநவீன டெக்னாலஜியுடன் கூடிய புரஜொக்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

ரிகா இண்டியாவின் அதிநவீன புரஜொக்டர்கள் அறிமுகம்

இந்த புதிய புரஜொக்டர்கள் PJ 52440, PJ x2440 and PJ WX2440 என்ற தன்மையில் வெளியகியுள்ள நிலையில் இவர் எடை குறைவான, எளிதில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பம், செயல்பாடு, மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை கொண்ட இந்த புரஜொக்டர்கள் குறித்து தற்போது பார்ப்போம்

இந்த புதிய வகை புரஜொக்டர்களின் டிசைன்கள் கான்ஃப்ரன்ஸ் அறைகள் மற்றும் வகுப்பு அறைகளுக்கு ஏற்றவாறு சரியான கனெக்சன் ஆப்சனுடன் அமைந்துள்ளது. இந்த புரஜொக்டர்கள் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் விளக்கக்காட்சிகள்

ஆகியவற்றை எளிதாக விளக்கலாம். அதேபோல் பயனாளிகள் புரஜொக்ட் அளவுகளை 30 இன்ச்கள் முதல் 300 இன்ச்கள் வரை அதன் அளவை அதிகப்படுத்தி கொள்ளவோ குறைத்துக் கொள்ளவோ முடியும்.

சாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய சூப்பர் அல்ட்ரா-வைட் ஆங்கிள் மானிட்டர்.!சாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய சூப்பர் அல்ட்ரா-வைட் ஆங்கிள் மானிட்டர்.!

ஒருசில அடி தூரத்தில் புரஜொக்டர்களை வைத்தாலே சரியான அளவில் படத்தை காண்பிக்க முடியும். மேலும் சிறந்த வண்ணம், மிருதுவான மற்றும் தெளிவான படங்கள் மற்றும் உரை வரையறை ஆகியவை கொண்ட இந்த புரஜொக்டர்கள் நிச்சயம் அனைவரின் கவனத்தை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புதிய புரஜொக்டர்கள் அறிமுகவிழாவில் ரிகா இண்டியா பிரைவைட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி யுகி உச்சிதா அவர்கள் கூறியபோது, 'டிஜிட்டல் லைட் நடைமுறைப்படுத்துதல் (DLP) தொழில்நுட்பம், நீடித்த, இலகுரக, புரஜொக்டர்கள் அலுவலகங்களில் தகவல்களை பரிமாறி கொள்ளவும், வகுப்பறைகள், மாநாடுகள் அல்லது எந்த இடத்தில் நிகழ்ச்சியிலும் தகவல்களை பரிமாறி கொள்ள உதவுகிறது.

பார்வையாளர்களுக்கு பகிரப்படும் எந்த செய்தியையோ அல்லது தரவையோ வாழ்க்கைக்கு கொண்டுவரும் நம்பமுடியாத, பிரகாசமான, தெளிவான மற்றும் சக்திவாய்ந்த திட்டங்களை அவர்கள் வழங்குகிறார்கள், எப்பொழுதும் எங்கள் நுகர்வோருக்கு சிறந்ததை வழங்குவதாக உறுதியளித்துள்ளோம், அந்த வகையில் இந்த புரஜொக்டர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எங்களின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்

புதிய ரிகா PJ 2440 வகை சீரீஸ் புரஜொக்டர்கள் நேர்த்தியான டிசைனுடன் இருப்பது மட்டுமின்றி திரையில் படங்களின் வண்ணங்களை தரமாகவும், பிரைட்டாகவும் காண்பிக்கும். அதிநவீன டெக்னாலஜியில் இந்த புரஜொக்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் இரைச்சல்கள் இல்லாத வகையில் ஒளிபரப்ப முடியும்.

மேலும் பயனாளிகள் இதில் புகைப்படங்களின் பிரைட்னெஸ்ஸை குறைத்தோ அல்லது அதிகப்படுத்தியோ, புகைப்படங்களின் தன்மைக்கு ஏற்றவாறு மாற்றி கொள்ளலாம். மேலும் இதில் உள்ள இண்டர்னல் ஸ்பீக்கர்களின் மூலம் தெளிவான ஆடியோவை கேட்க முடியும்.

அதுமட்டுமின்றி வெளியே கூடுதலான ஸ்பீக்கர்களையும் பொருத்தும் வசதியும் உள்ளது. இந்த புரஜொக்டர்கள் சுமார் 5000 மணி நேரம் முதல் 6000 மணி நேரம் வரை உழைக்கும் தன்மையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

ரீகா (J 52440 ) Ricoh PJ 52440

ரீகா (J 52440 ) Ricoh PJ 52440

இந்த மாடல் புரொஜக்டர்கள் பெரிய திரையில் ஸ்டில்கள், பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களில் இருந்தும் புரொஜக்ட் செய்ய உதவுகிறது. இந்த மாடலின் பிரைட்னெஸ் அபாரமாக இருப்பதற்கு காரணம் இதில் 3000 லூமென்ஸ் பிரைட்னெஸ் உள்ளது.

மேலும் 10000:1 என்ற விகித்தத்தில் இதன் காண்ட்ராஸ்ட் உள்ளது. இந்த புரொஜக்டரின் மூலம் 800x600 ரெசலூசனில் 4:3 என்ற விகிதத்தில் படங்களை திரையில் ஒளிபரப்பலாம். மேலும் இந்த மாடல் புரொஜக்டர்கள் வெறும் 2.5 கிலோ எடை மட்டுமே உள்ளது.

ரிகோ PJ X2440 மர்றும் ரிகோ PJ WX2440:

ரிகோ PJ X2440 மர்றும் ரிகோ PJ WX2440:

மேற்கண்ட இரண்டு வகை புரொஜக்டர்களுமே உயர் தரத்தில் இமேஜ்கள் மற்றும் வீடியோக்கள் சிறப்பான தரத்தில் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரிகோ PJ X2440 மாடல் 1024x768 XGA ரெசலூசனிலும், ரிகோ PJ WX2440 மாடல் 1280 2,1 800 dpi ரெசலூசனிலும் செயல்படக்கூடியது.

மேலும் PJ X2440 மாடல் பிரைட்னெஸ் 3,130 லூமென் அளவிலும், PJ WX2440 மாடல்3100 லூமென் அளவிலும் இருக்கும். இரண்டு மாடல்களின் காண்ட்ராஸ் 10000:1 என்ற அளவில் உள்ளது. எனவே இந்த புரொஜக்டர்கள் மிகவும் துல்லியமான ரிசல்ட்டை தரும்.

இரண்டு மாடல்கள் புரொஜக்டரிலும் 16:10 என்ற ஆஸ்பெக்ட் விதம் இருப்பதாலும், HDMKI/MHL உள்பட பல இன்புட் டெர்மின்லகள் இருப்பதாலும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், லேப்டாபுகள், டேப்ளட், புளூரே பிளேயர்கள் ஆகியவற்றின் மூலமும் இயக்கலாம்

மேலும் 3D தரத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் தெரிய வேண்டும் என்றாலும் அதற்குரிய ஆப்சனும் இந்த புரொஜ்டகரில் உள்ளது. அதுமட்டுமின்றி வைபை மூலம் வயர்லெஸ் புரொஜக்சன் வசதியும் இதில் உண்டு

அடுத்த 7 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடக்கப்போகும் கொடூரமான அசம்பாவிதங்கள்.!அடுத்த 7 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடக்கப்போகும் கொடூரமான அசம்பாவிதங்கள்.!

விலை எவ்வளவு?

விலை எவ்வளவு?

இந்தியாவில் ரிகோ PJ X52440 விலை ரூ.32,450 என்ற விலையிலும் PJ X2440 மாடலின் விலை ரூ.37,760 என்ற விலையிலும், ரிகோ PJ WX2440 மாடலின் விலை ரூ.45,910 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Ricoh, a premier provider of Imaging Solutions and IT services today announced the launch of its new series of Innovative projectors in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X