Home
Gadgets

ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் தற்சமயம் இயர்பட்ஸ் மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இதைப் பயன்படுத்தி ஸ்காட்லாந்தை சேர்ந்த ஹெட்போன் நிறுவனமான ஆர்ஹெச்ஏ இந்தியாவில் ட்ரூகனெக்ட் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை
அறிமுகம் செய்துள்ளது.

44மணி நேர பேட்டரி

குறிப்பாக இந்த ட்ரூகனெக்ட் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆனது 44மணி நேர பேட்டரி லைஃப்,ப்ளூடூத் 5.0, ஐபி55 சான்று, கேபாசிட்டி டச் கண்ட்ரோல்கள், டூயல் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

 6எம்எம் டைனமிக் டிரைவர்கள்

மேலும் ட்ரூகனெக்ட் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் 6எம்எம் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது அடியோ அனுபவத்தை மேம்படுத்தி வழங்குகிறது. பின்பு இதில் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால் மற்ற சாதனங்களுடன் எளிதில் இணைந்து கொள்வதோடு சீரான இணைப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ட் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

இந்த ட்ரூகனெக்ட் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் டூயல் மைக்ரோபோன்கள் அழைப்புகளுக்கு ஏற்ற வகையில் ஆப்டிமைஸ் செய்யப்படுகிறது. பின்பு இதில் நாய்ஸ் ரெட்யூசிங் மைக் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இயர்பட்ஸ் ஐபி55 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது இந்த சாதனம்.

 சாதனத்தில் மியூசிக் பிளேபேக்,

இந்த அட்டகாச சாதனத்தில் மியூசிக் பிளேபேக், வால்யூம் போன்ற அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன.மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சார்ஜ் செய்தால் 9 மணி

ட்ரூகனெக்ட் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என்றும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 35 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ்

ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆனது கருப்பு மற்றும் நீலம் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.மேலும் இதன் விற்பனை ஆன்லைனில் நடைபெறுகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
RHA TrueConnect 2 Truly Wireless Earbuds Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X