336ஜிபி டேட்டாவுடன் ஜியோஃபை மீது நம்பமுடியாத ஆபர்; வாங்குவதற்கு சரியான நேரம்.!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் ரூ.1999/- என்கிற புதிய ஜியோஃபை சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பின் கீழ் ரூ.2,300/- மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களுடன் சேர்த்து ரூ.1,295/- மதிப்புள்ள டேட்டா நன்மையையம் பெறலாம்.

இந்த வாய்ப்பானது முந்தைய ஜியோஃபை ரூ.999/- சலுகைக்கான சிறந்த மாற்றாகும் உடன் அதிக நன்மைகளையும் வழங்குகிறது. இந்த வாய்ப்பின்படி வெறுமனே ஜியோஃபை ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்குவதன் மூலம் ஜியோவின் பல்வேறு நன்மைகளை அனுபவிக்கலாம். அதென்னன.?

இதில் என்ன ஸ்பெஷல்.?

இதில் என்ன ஸ்பெஷல்.?

இந்த சலுகையில் சுவாரசியமான பகுதி என்னவென்றால், ஜியோஃபை சாதனத்தை வாங்கும் பயனர்களுக்கான முதல் மூன்று ரீசார்ஜ் ஆனது வித்தியாசமான தரவு நன்மை மற்றும் செல்லுபடியாகும் கால விருப்பங்களை வழங்குகிறது.

அணுகுவது எப்படி.?

அணுகுவது எப்படி.?

இந்த புதிய சலுகையானது ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து சில்லறை கடைகளிலும் திறந்து விடப்பட்டுள்ளது மற்றும் ஏற்கனவே ஜியோ.காம் வலைத்தளங்களில் அணுக கிடைக்கிறது.

ஒரு நாளைக்கு1.5ஜிபி

ஒரு நாளைக்கு1.5ஜிபி

நீங்கள் ரூ.1,999/-க்கு ஜியோஃபை ஹாட்ஸ்பாட் சாதனம் வாங்கும் போதே, மூன்று முதல் ரீசார்ஜ் விருப்பங்களுக்கிடையே தேர்வுதனை நிகழ்த்த வேண்டும். முதல் விருப்பமானது, உங்களுக்கு எட்டு ரீசார்ஜ் சுழற்சிகளின் கீழ் (எட்டு மாதங்களில்) ஒரு நாளைக்கு1.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும்.

ஒரு நாளைக்கு 2/3ஜிபி

ஒரு நாளைக்கு 2/3ஜிபி

இரண்டாவது விருப்பமானது, உங்களுக்கு ஆறு ரீசார்ஜ் சுழற்சிகளின் கீழ் (ஆறு மாதங்களில்) ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். மூன்றாவது விருப்பமானது, உங்களுக்கு நான்கு ரீசார்ஜ் சுழற்சிகளின் கீழ் (நான்கு மாதங்களில்) ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும்.

சமம்

சமம்

அதாவது ஜியோ 4ஜி சேவையின் கீழ் கிடைக்கும் திட்டங்களின் அடிப்படையில் பார்த்தால், முதல் விருப்பமானது ஜியோ ரூ.149/-க்கு சமம். அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பங்களானது ரூ.199/- மற்றும் ரூ.299/- ஆகிய கட்டணத் திட்டங்களாகும்.

ஜியோப்ரைம் உறுப்பினர் தகுதி

ஜியோப்ரைம் உறுப்பினர் தகுதி

ஆக இந்த மூன்று ரீசார்ஜ் விருப்பங்களுமே, மொத்தம் 336ஜிபி அளவிலான தரவு நன்மையை அளிக்கிறது. உடன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ.99 மதிப்புள்ள இலவச ஜியோப்ரைம் உறுப்பினர் தகுதியையும் வழங்கும்.

செய்ய வேண்டியது எல்லாம்

செய்ய வேண்டியது எல்லாம்

இதை அனைத்தையும் பெற நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ரூ.1,999/- மதிப்பிலான ஒரு ஜியோஃபை ரவுட்டரை ரிலையன்ஸ் சில்லறை அங்காடியிலோ அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ வாங்க வேண்டும், அவ்வளவுதான்.

பேடிஎம், ஏஜியோ மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல்

பேடிஎம், ஏஜியோ மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல்

முன்னர் குறிப்பிட்டபடி, இந்த வாய்ப்பின் கீழ் டேட்டா நன்மைகள் மட்டுமின்றி ரூ.2,300/- ரூபாய் மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்கயும் நீங்கள் பெறுவீர்கள். அவைகளை பேடிஎம், ஏஜியோ மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகிய தளங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ரூ.1,000/- மதிப்புள்ள தொகை கிடைக்கும்

ரூ.1,000/- மதிப்புள்ள தொகை கிடைக்கும்

அதாவது வாடிக்கையாளர்கள் பேடிஎம் தளத்தில் இருந்து ரூ.800/- கேஷ்பேக் 0வவுச்சர்களை பெறுவார்கள், இது குறைந்தபட்சம் இரண்டு விமான முன்பதிவுகளுக்கு பயன்படுத்தப்படலாம். ஏஜியோ வவுச்சர்களைப் பற்றி பேசுகையில் ரூ.500/- கிடைக்கும். இறுதியாக, ரிலையன்ஸ் டிஜிட்டலில் கொள்முதல் செய்வதற்கு ரூ.1,000/- மதிப்புள்ள தொகை கிடைக்கும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
மைஜியோ பயன்பாட்டின் வழியாக

மைஜியோ பயன்பாட்டின் வழியாக

இந்த கூப்பன்கள் மைஜியோ பயன்பாட்டின் வழியாக வாடிக்கையாளரின் ஜியோஃபை கணக்கில் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Reliance JioFi Rs 1,999 Offer Gives Free Benefits Worth Rs 3,595 Along With 336GB Free Data. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X