அறிமுகம்: வெறும் ரூ.999/-க்கு 3000எம்ஏஎச் திறன் கொண்ட புதிய ஜியோஃபை மாடல்.!

இந்த புதிய மாடலின் சிறப்பம்சமே அதன் முற்றிலும் புதிய வட்ட வடிவ வடிவமைப்பு மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரித்திறன் ஆகியவைகளாகும்.

|

ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு நாளும் அதன் ஜியோஃபை ஹாட்ஸ்பாட் சாதனத்தின் புதிய மாடல்களை அமைதியான முறையில் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. இன்றும் அப்படியானவொரு தான். ரிலையன்ஸ் ஜியோவின் ரிலையன்ஸ் ரீடெயில் ஆனது இன்று அதன் புதிய ஜியோஃபை (மாடல் எண் ஜேஎம்ஆர்815_ கருவியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய மாடலின் சிறப்பம்சமே அதன் முற்றிலும் புதிய வட்ட வடிவ வடிவமைப்பு மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரித்திறன் ஆகியவைகளாகும். இது முன்னர் வெளியான 2600எம்ஏஎச் மற்றும் 2300எம்ஏஎச் பேட்டரியை விட சிறந்தது மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ரூ.999/-க்கு இ- காமர்ஸ் போர்ட்டில் விற்பனைக்கு.!

ரூ.999/-க்கு இ- காமர்ஸ் போர்ட்டில் விற்பனைக்கு.!

இந்த புதிய ரிலையன்ஸ் ஜியோஃபை மாடல் ஆனது ஏற்கனவே ரூ.999/-க்கு இ- காமர்ஸ் போர்ட்டில் விற்பனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தயாரிப்பு #OnlyonFlipkart என்கிற பிரிவின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது, இதன் பொருள் ப்ளிப்கார்ட்டில் மட்டுமே வாங்க கிடைக்கும்.

புதிய வடிவமைப்பு.!

புதிய வடிவமைப்பு.!

பெரிய பேட்டரி மற்றும் புதிய வடிவமைப்பு தவிர, பழைய மாதிரிகளுக்கும் இதற்கும் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதுமில்லை. முன்னதாக வெளியான ஜியோஃபை மாதிரிகள் ஓவல்-வடிவ வடிவமைப்பு மற்றும் ரூ1,999/ என்கிற விலை நிர்ணயம் மற்றும் ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டிருந்தன.

அனைத்துமே பொத்தான்கள் வடிவில்.!

அனைத்துமே பொத்தான்கள் வடிவில்.!

இந்த புதிய மாடல் ஆனதில் அனைத்துமே பொத்தான்கள் வடிவில் தான் (பவர், டபுள்யூபிஎஸ், இன்டிகேட்டர்)கொண்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, இன்டிகேட்டர் பொத்தான்கள் மேல் பக்கத்தில் வைக்கப்படுகின்றன, இது பேட்டரி, சிக்னல் பலம் போன்ற நிலைமைகளை எல்இடி லைட்டுகள் வழியாக வெளிப்படுத்தும்.

31 சாதனங்களை இணைக்க முடிவதற்கான திறன்.!

31 சாதனங்களை இணைக்க முடிவதற்கான திறன்.!

இந்த புதிய ஜியோஃபை ஹாட்ஸ்பாட்டின் தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்தமட்டில், முன்னர் வெளியான ஹாட்ஸ்பாட்களில் இருப்பது போன்றே - ஒரு யூஎஸ்பி போர்ட் மற்றும் 31 சாதனங்களை இணைக்க முடிவதற்கான திறன் ஆகியவைகளை கொண்டுள்ளது.

4ஜி ஹாட்ஸ்பாட் சாதனமாக திகழும்.!

4ஜி ஹாட்ஸ்பாட் சாதனமாக திகழும்.!

ஜியோ ஒரு எல்டிஇ ஒன்லி நெட்வொர்க் என்பதால் ஜியோஃபை ஒரு 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனமாக திகழும். அதாவது யூஎஸ்பி-யை பயன்படுத்தியும் கூட பயனர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம். இந்த புதிய மாடல் ஆனது எப்டிடி பேண்ட் 3, பேண்ட் 5 மற்றும் டிடிடி பேண்ட் 40 நெட்வொர்க் பேண்ட் ஆகிய ஆதரவுடன் வருகிறது.

எட்டு மணி நேர பேட்டரி ஆயுள்.!

எட்டு மணி நேர பேட்டரி ஆயுள்.!

இந்த புதிய சாதனம் 150எம்பிபிஎஸ் வேகத்திலான பதிவிறக்க வேகம் மற்றும் 50 எம்பிபிஎஸ் வேகத்திலான பதிவேற்ற வேகத்தை வழங்கும் திறன் கொண்டது என்பதும், இது ஏஎல்டி3800 செயலி மூலம் இயக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் 3000எம்ஏஎச் பேட்டரியானது, எட்டு மணி நேர பேட்டரி ஆயுளை வழங்குமென்று தயாரிப்பு பக்கம் கூறுகிறது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே.!

ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே.!

இந்த புதிய மாடல், இப்போது வரை ஜியோ.காம் நிறுவனத்தில் பட்டியலிடப்படாமல், ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே வாங்க கிடைக்கும்படி உள்ளது என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம்.

Best Mobiles in India

English summary
Reliance JioFi JMR815 Variant With 3000mAh Battery Launched at Rs 999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X