ஜியோ அறிமுகம் செய்த ஸ்மார்ட் கண்ணாடி.! என்னென்ன சிறப்பம்சங்கள்!

|

ரிலையன்ஸ் நிறுவனம் நேற்று தனது 43-வது ஆண்டு பொது கூட்டத்தில் கலப்பு ரியாலிட்டி ஸ்மார்ட் கிளாஸை அறிமுகம் செய்தது, குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஜியோ கிளாஸை அறிமுகம் செய்தது, இந்த கண்ணாடியில், ஒரு கேபிள் உள்ளது. அந்த
கேபிள்ஸ் உதவியுடன் அதை உங்கள் ஸ்மார்ட்போன் உடன் இணைக்கமுடியும்.

5 கிராம் எடை

மேலும் இந்த ஜியோ ஸ்மார்ட் கண்ணாடி 75 கிராம் எடை கொண்டுள்ளது, இது ரியாலிட்டி அனுபவத்தில் சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த சாதனம் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுபவத்தை பெறுவதை

குறிப்பாக ஜியோ தனது ஸ்மார்ட் கிளாஸின் கிராபிக்ஸ் குறித்து நிறைய வேலைகளை செய்துள்ளதுடன், பயனருக்கு கண்ணாடி மூலம் மிகவும் உயர்ந்த காட்சி அனுபவத்தை பெறுவதை உறுதிசெய்துள்ளது. மேலும் இந்த சாதனத்தை அறிமுகம் செய்தபோது, ஜியோ கண்ணாடி குறித்த டெமோவும் காட்டப்பட்டது. ஜியோ கிளாஸ் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் பேசலாம் மற்றும் வீடியோஅழைப்புகளை மேற்கொள்ளமுடியும.

ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களக்கு புத்தம் புதிய அப்டேட்.!ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களக்கு புத்தம் புதிய அப்டேட்.!

 ஜியோ ஸ்மார்ட் கண்ணாடி

இந்த அட்டகாசமான ஜியோ ஸ்மார்ட் கண்ணாடி 3D ஹாலோகிராபிக் வீடியோ அழைப்பு ஆதரவுடன் வருகிறது. அதாவது எளிமையாக கூற வேண்டும் என்றால், வீடியோ அழைப்பின் போது, ​​உங்களை 3D வடிவத்தில் பார்க்க முடியும். ஜியோ கிளாஸ் 25 பயன்பாடுகளை ஆதரிக்கிறது.

 ஏஜிஎம்மில் இண்டஸ்ட்ரீஸ்

நேற்று நடைபெற்ற ஏஜிஎம்மில் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தது என்னவென்றால், மிகக் குறுகிய காலத்தில் 50லட்சத்துக்கும் அதிகமானோர் ஜியோமீட் வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர், மேலும் ஜியோ பயன்பாடு கிளவுட் அடிப்படையிலானவீடியோ கான்பரன்சிங் தளம் என்பது உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். இது ஆப் பயன்பாடு மற்றும் டெஸ்டாப் இரண்டிலும் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தார்.

என்னமா யோசிக்கிறாங்க- ஹலோ நான் ஸ்காட்லாந்து பைலட் பேசுறேன்., ஆசிரியையிடம் ரூ. 58 லட்சம் அபேஸ்!என்னமா யோசிக்கிறாங்க- ஹலோ நான் ஸ்காட்லாந்து பைலட் பேசுறேன்., ஆசிரியையிடம் ரூ. 58 லட்சம் அபேஸ்!

 ஜியோ மற்றும் கூகுள்

இதுவரை ஜியோ பிளாட்ஃபர்ம்களில் 7.7சதவிகிதம் பங்குகளுக்கு கூகுள் ரூ.33.737கோடியை முதலீடு செய்யும் எனறு முகேஷ் அம்பானி இந்த கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் கூகுளின் முதலீட்டில் ரிலையன்ஸ் முதலீட்டின் எண்ணிக்கை இப்போது 1.52லட்சம் கோடியைஎட்டியுள்ளது என்றும், இதுவரை 14நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்துள்ளன எனவும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். பின்பு ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Reliance launches Jio Glass: What it is and how it works: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X