சதுர டிஸ்ப்ளே, ஆரோக்கிய அம்சம்: மே 13 வெளியாகும் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச்!

|

சதுர காட்சி அமைப்புடன் ரெட்மி வாட்ச் மே 13 அன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

மே 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்

மே 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்

ரெட்மி நோட் 10 எஸ் சாதனத்தை நாட்டில் அறிமுகம் செய்ய சியோமி தயாராக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மே 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 எஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவலோடு #WearYourVibe என்ற ஹேஷ்டேக்கையும் டீஸரில் பகிர்ந்துள்ளது. அதேபோல் ரெட்மி இந்தியா டுவிட்டரில் ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை டீஸ் செய்திருக்கிறது.

அணியக்கூடிய முதல் ரெட்மி சாதனம்

அணியக்கூடிய முதல் ரெட்மி சாதனம்

இந்தியாவில் ரெட்மி பிராண்டின் கீழ் வரும் இரண்டாவது தயாரிப்பு இதுவாகும். கடந்தாண்டு ரெட்மி நாட்டில் அணியக்கூடிய முதல் ரெட்மி இசைக்குழுவை அறிமுகம் செய்தது. அதேபோல் இந்த வரவிருக்கும் ரெட்மி வாட்ச் ஆனது எம்ஐ வாட்ச் போன்ற சில சந்தைகளிலும் கிடைக்கிறது. இந்தியாவில் ரெட்மி வாட்ச்சிந் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

ரெட்மி வாட்ச்சில் எதிர்பார்க்கப்படும் விலை

இந்தியாவில் ரெட்மி வாட்ச்சில் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்திய விலை மதிப்புப்படி சுமார் ரூ.3029 ஆக விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஐ வாட்ச் லைட் ஆனது தாய்லாந்து போன்ற பிற சந்தைகளில் இந்திய விலைப்படி சுமார் ரூ.3400 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்திய சந்தையில் ரெட்மி வாட்ச் ஆனது சுமார் ரூ.3000 - ரூ.3500 என இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

ரெட்மி வாட்ச் அம்சங்கள்

ரெட்மி வாட்ச் அம்சங்கள்

ரெட்மி வாட்ச் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த வாட்ச் ஆனது செவ்வக வடிவில் இருக்கிறது. இது 1.4 இன்ச் எல்இடி டிஸ்ப்ளே அளவை கொண்டிருக்கிறது. இந்த காட்சி 320 × 320 பிக்சல் தீர்மானத்துடன் வரும், அதேபோல் 323 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 60% என்டிஎல் வண்ண வரம்புடன் வரும் என கூறப்படுகிறது.

24 மணிநேர நேரடி இதய துடிப்பு கண்காணிப்பு

24 மணிநேர நேரடி இதய துடிப்பு கண்காணிப்பு

இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது வாட்டர் ரெசிஸ்டெண்ட் அம்சத்துடன் வருகிறது. ரெட்மி வாட்ச் ஆனது 24 மணிநேர நேரடி இதய துடிப்பு கண்காணிப்பு சென்சார் உடன் வருகிறது. அதுமட்டுமின்றி இது தூக்க கண்காணிப்பு அம்சத்தையும் ஆதரிக்கிறது. டிஸ்ப்ளேவில் இசை தடங்கள் ஆதரவும் இருக்கிறது. விளையாட்டு முறை கண்காணிப்பு ஆதரவும் இதில் இருக்கிறது. அதேபோல் இதில் 11 விளையாட்டு முறைமைகளை கொண்டிருக்கிறது. இது நடைபயிற்சி, மலையேற்ற்ம, ரன்னிங், டிரெட்மில், சைக்கிளிங், நீச்சல், கிரிக்கெட் உள்ளிட்ட ஆதரவுகளை வழங்குகிறது.

9 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

9 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

ரெட்மி வாட்ச் சாதாரண பயன்பாட்டில் இருக்கும் போது 9 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் ஆதரவை வழங்குகிறது. அதேபோல் இது 230 எம்ஏஎச் பேட்டரி மூலம் தொடர்ச்சியான பயன்பாட்டை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு 5.0 ஆதரவு, மென்பொருள் இயங்குதளம், சாதனங்கள் இணைப்பு ஆதரவாக ப்ளூடூத் 5.0 இணைப்பு விருப்பத்தையும் வழங்குகிறது. அதேபோல் ரெட்மி வாட்ச்சில் ஜியோமேக்னடிக், கைரோஸ்கோப், ஆல்டிமீட்டர் மற்றும் திசைகாட்டி சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.

மூன்று வண்ண விருப்பங்கள்

மூன்று வண்ண விருப்பங்கள்

இந்த ஸ்மார்ட்வாட்ச் வளைந்த டிஸ்ப்ளே காட்சியை கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ரெட்மி வாட்ச் ஆனது எலகன்ட் பிளாக், இங்க் ப்ளூ, ஐவோரி வைட் வண்ணம் விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரெட்மி பிராண்டின் கீழ் மே 13 அன்று அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ விலை மற்றும் அம்சங்கள் அன்றைய தினத்தில் தெரியவரும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Watch Set to Launch in India on May 13

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X