பிளிப்கார்ட் காலி.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. IP68 ரேட்டிங்.. 300mAh பேட்டரி.. TPU ஸ்ட்ராப்.. எந்த மாடல்?
அடிமட்ட பட்ஜெட்டில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 14 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும் 300mAh பேட்டரி, 1.5 மீட்டர்கள் ஆழம் வரையில் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும் IP68 ரேட்டிங் போன்ற பீச்சர்களுடன் ரெட்மி வாட்ச் மூவ் (REDMI Watch Move) மாடலானது இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.
ரெட்மி வாட்ச் மூவ் அம்சங்கள் (REDMI Watch Move Specifications): இந்த ரெட்மி மாடலில் 1.85 இன்ச் (390 x 450 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 322 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, ஏஓடி மோட் (AOD Mode) சப்போர்ட் கிடைக்கிறது.

பால்ம் டச் (Palm Touch) மற்றும் 2.5டி கர்வ்ட் ஸ்கிரீன் டிசைன் வருகிறது. குயிக் அக்சஸ், டேப் & ஸ்க்ரோல் மற்றும் நேவிகேஷன் கன்ட்ரோல்களுக்கு ஃபங்ஸ்னல் க்ரோவ்ன் (Functional Crown) வருகிறது. 38.9 எம்எம் தடிமன் மற்றும் ஸ்ட்ராப் இல்லாமல் 25 கிராம் எடை வருகிறது. அதேபோல டிபியு (TPU) ஸ்ட்ராப் இருந்தால், 39 கிராம் எடை இருக்கிறது.
ஆகவே, ஓரளவுக்கு லைட் வெயிட் மாடலாக இருக்கும். இந்த ரெட்மி வாட்ச் மூவ் மாடலுக்கு ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) சப்போர்ட் உள்ளது. இதே ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் நொடியில் கனெக்டிவிட்டி பக்கா ஸ்மூத் அவுட்புட் கிடைக்கிறது. டைபிகல் யூசேஜ் மோடில் (Typical Usage Mode) 14 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 300mAh பேட்டரி கிடைக்கிறது.
ஹெவி யூசேஜ் மோடில் (Heavy Usage Mode) 10 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கிறது. ஏஓடி மோடில் 5 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 2 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஹார்ட் ரேட் சென்சார் (Heart Rate Sensor) மற்றும் அதனுடன் பிளட் ஆக்ஸிஜன் சென்சார் (Blood Oxygen Sensor) கிடைக்கிறது.
மேலும், ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) கிடைக்கிறது. இந்த சென்சார்கள் மூலம் ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டர் (Stress Level Monitor), ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker), ஃபீமேல் சைக்கிள் டிராக்கர் (Female Cycle Tracker) வருகிறது. மேலும், ஸ்டெப்ஸ் (Steps) மற்றும் காலோரி டிராக்கர் (Calories Tracker) கிடைக்கிறது.
இதில் ஹார்ட் ரேட் மற்றும் பிளட் ஆக்ஸிஜன் லெவல் ஆகியவை 24 மணி நேரமும் மானிட்டர் செய்யப்படும். இந்த ரெட்மி மாடலில் 140+ வொர்க்அவுட் மோட்கள் இருக்கின்றன. இதில் அவுட்டோர் ரன்னிங் (Outdoor Running), ட்ரெட்மில் (Treadmill), வாக்கிங் (Walking), அவுட்டோர் சைக்கிளிங் (Outdoor Cyclinging) போன்ற வொர்க்அவுட் மோட்கள் ஆட்டோ-டிடெக்சன் செய்யப்படும்.
இதற்காக எம்ஐ ஃபிட்னஸ் ஆப் (Mi Fitness App) சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு ஏற்றபடி IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆகவே, இந்த மாடலானது, 1.5 மீட்டர்கள் ஆழம் மற்றும் 30 நிமிடங்கள் அண்டர் வாட்டரில் தாக்குப்பிடிக்க கூடியது. மேலும், குயிக் ரீப்ளை, ஈஸி டயலிங் பேட், கால் ஹிஸ்டரி போன்ற ப்ளூடுத் காலிங் பீச்சர்கள் கிடைக்கின்றன.
பிளாக் டரிப்ட் (Black Drift), கோல்டு ரஷ் (Gold Rush), சில்வர் ஸ்பிரின்ட் (Silver Sprint) மற்றும் ப்ளூ பிளேஸ் (Blue Blaze) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஏப்ரல் 24ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. இந்த ரெட்மி வாட்ச் மூவ் மாடலின் விலை ரூ.1,999ஆக இருக்கிறது. எம்ஐ (mi) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








