எதிர்பார்த்து காத்திருந்த Redmi Watch அறிமுகமானது.. வாங்க ரெடியா? விலை மற்றும் விபரம்..

|

சியோமி தனது ரெட்மி பிராண்டின் கீழ் ரெட்மி நோட் 9 சீரிஸை இன்று அறிமுகப்படுத்திய கையோடு, புதிய ரெட்மி ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்வாட்சின் விலை மற்றும் சிறப்பம்சம் விபரங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி வாட்ச்

ரெட்மி வாட்ச்

ரெட்மி வாட்ச் எலெகண்ட் பிளாக், இங்க் ப்ளூ மற்றும் ஐவரி ஒயிட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செர்ரி பிங்க் மற்றும் பைன் கிரீன் உள்ளிட்ட நிறங்களில் வாட்ச் ஸ்ட்ராப்களை தேர்வுசெய்யவும் நிறுவனம் அனுமதிக்கிறது. புதிய ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 3,018 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி வாட்ச் விவரக்குறிப்புகள்

ரெட்மி வாட்ச் விவரக்குறிப்புகள்

ரெட்மி வாட்சில் 1.4' இன்ச் உடன் கூடிய 320 × 320 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட எல்சிடி சதுர வடிவ டிஸ்பிளேயுடன் வருகிறது. 323 பிபிஐ மற்றும் 2.5D கண்ணாடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 120 க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் அம்சத்துடன் வருகிறது. புளூடூத் 5.0 உடன், இது Android 5.0+ மற்றும் iOS 10.0+ இல் இயங்கும் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கும் படி வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Whatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..

7 ஸ்போர்ட்ஸ் மோடு

7 ஸ்போர்ட்ஸ் மோடு

ரெட்மி வாட்ச் இண்டோர் ரன்னிங், அவுட்டோர் ரன்னிங், சைக்ளிங், நீச்சல், நடைப்பயிற்சி, ஃப்ரீஸ்டைல் ​​உள்ளிட்ட 7 ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன் வருகிறது. இது 24 மணி நேர இதய துடிப்பு கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு, உட்கார்ந்த கண்காணிப்பு மற்றும் உங்கள் ஓய்வெடுக்கும் இதய துடிப்பு பற்றிய 30 நாள் அறிக்கை ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது சுவாச பயிற்சிகளையும் வழங்குகிறது மற்றும் தொடர்பு இல்லாத கட்டணங்களுக்கான NFC அம்சமும் இதில் உள்ளது.

பேட்டரி ஆயுள்

பேட்டரி ஆயுள்

இந்த ஸ்மார்ட் வாட்சில் 230 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, இது வழக்கமான பயன்பாட்டுடன் 7 மணிநேர பேட்டரி ஆயுள் மற்றும் 12 நாட்கள் நீண்ட பேட்டரி ஆயுள் பயன்முறையில் வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இது XiaoAI வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவுடன், இன்பில்ட் மைக்ரோஃபோனைக் கொண்டுள்ளது. இது வாய்ஸ் கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் நோட்டிபிகேஷன் மற்றும் அலாரம் நோட்டிபிகேஷன் உடன் வருகிறது.

ரெட்மி வாட்ச் விலை

ரெட்மி வாட்ச் விலை

ரெட்மி வாட்ச் ஸ்டெப் கவுண்ட் கண்காணிப்புடன் வருகிறது. இது 50 மீட்டர் ஆழம் வரை தாக்குப்பிடிக்கும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் ஆறு வெவ்வேறு சென்சார்களுடன் வருகிறது. இதன் எடை வெறும் 35 கிராம் மட்டுமே, சீனாவில் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் 269 யுவான் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Redmi Watch Launched With Redmi Note 9 series, Know The Specifications and Price Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X