இவன் வேற ரகம்.. சிங்கிள் சார்ஜில் 24 நாட்கள் பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி வாட்ச் 6 (REDMI Watch 6) மாடல் வெளியாகி இருக்கிறது. பிரீமியம் மாடல்களுக்கு நிகராக அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 24 நாட்களுக்கான பேட்டரி, 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது. இந்த ரெட்மி வாட்ச் 6 மாடலின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் முதலில் களமிறங்கியது. இப்போது, குளோபல் மார்கெட்டில் இந்த ரெட்மி வாட்ச் 6 அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பீச்சர்களில் பெரிய மாற்றம் இல்லை. ஆகவே, இந்திய மார்கெட்டில் வெளியாகினால், இதே பீச்சர்களை எதிர்பார்க்கலாம். ஆகவே, ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

ரெட்மி வாட்ச் 6 முக்கிய அம்சங்கள்: 2.07 இன்ச் (432 x 514 பிக்சல்கள்) ஸ்குவார் அமோலெட் டிஸ்பிளேவை (Square AMOLED Display) கொடுத்து உள்ளது. 324 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. 1500 நிட்ஸ் எச்பிஎம் கிடைக்கிறது. 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த ரெட்மி வாட்ச் 6 இருக்கிறது.
ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கிடைக்கிறது. இன்-பில்ட் ஸ்பீக்கர் மற்றும் 1 மைக்ரோபோன் கொடுக்கப்பட்டு உள்ளது. 512 எம்பி ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக இந்த ரெட்மி வாட்ச் 6 இருக்கிறது. 9.9 எம்எம் அல்ட்ரா ஸ்லிம் பாடியை கொடுத்துள்ளது. அலுமினியம் அலாய் ஃபிரேம் (Aluminum Alloy Frame) கிடைக்கிறது.
மல்டி டைமன்சினல் ஹெல்த் மானிட்டரிங் (Multi-dimensional Health Monitoring) வருகிறது. பிளட் ஆக்ஸிஜன் சென்சாருடன் (Blood Oxygen Sensor) ஹார்ட் ரேட் சென்சார் (Heart Rate Sensor) கிடைக்கிறது. மேலும், ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), கைரோஸ்கோப் (Gyroscope), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் எலக்ட்ரானிக் காம்பஸ் (Electronic Compass) கிடைக்கிறது.
ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் மற்றும் ஸ்ட்ரெஸ் மானிட்டர் உள்ளிட்ட பெரும்பாலான ஹெல்த் மானிட்டர்கள் கிடைக்கின்றன. மேலும், 150+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) கிடைக்கின்றன. டூயல் பட்டன் நேவிகேஷன் (Dual-button navigation) மற்றும் ரோட்டேட்டிங் கிரவுண்ட் கன்ட்ரோல்களை கொடுத்து இருக்கிறது.
ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே கிடைக்கிறது. 20 வைப்ரேஷன் பேட்டர்ன்களுடன் லீனியர் மோட்டார் வருகிறது. ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்களுக்காக கிடைக்கிறது. ஜிபிஎஸ் (GPS), கலிலியோ (Galileo), குளோனாஸ் (Glonass), பெய்டூ (BeiDou) மற்றும் கியூஇசட்எஸ்எஸ் (QZSS) கிடைக்கிறது. 550mAh பேட்டரியை கொடுக்கிறது.
இந்த பேட்டரியை பொறுத்தவரையில் லைட் யூசேஜில் 24 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கிறது. நார்மல் யூசேஜில் 12 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். மேலும், ஹெவி யூசேஜில் 7 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கிறது. மேக்னட்டிக் சார்ஜிங் (Magnetic Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi HyperOS) கொடுத்துள்ளது.
ரிமோட் கேமரா கன்ட்ரோல் (Remote Camera Control) கிடைக்கிறது. குளோபல் மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்தியாவில் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கும் இதே பட்ஜெட்டில் கிடைக்கலாம். அப்சிடியன் பிளாக் (Obsidian Black), சில்வர் கிரே (Silver Gray) மற்றும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications