பின்னி எடுக்குறானே.. ஒரே சார்ஜ் போதும்.. 24 நாட்களுக்கு பேட்டரி.. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் பக்கா பேக்கப் கொண்ட மாடலாக ரெட்மி வாட்ச் 6 (REDMI Watch 6) ஸ்மார்ட்வாட்ச் களமிறங்கி இருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும், 24 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரி கிடைக்கிறது. இதுபோக அமோலெட் டிஸ்பிளே, 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், ஹார்ட் ரேட் மானிட்டரிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 கொண்ட இந்த ரெட்மி வாட்ச் 6 ஸ்மார்ட்வாட்ச்சின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரெட்மி கே90 (REDMI K90) மற்றும் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் (REDMI K90 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்கள் சீன மார்கெட்டில் வெளியாகின. இந்த மாடல்களுடன் ரெட்மி டிவி எஸ் ப்ரோ (REDMI TV S Pro), ரெட்மி ப்ரொஜெக்டர் 4 ப்ரோ (REDMI Projector 4 Pro) மற்றும் ரெட்மி வாட்ச் 6 மாடல்களும் களமிறங்கின.

இதில் ரெட்மி வாட்ச் 6 மாடலானது, பேக்கப் மட்டுமல்லாமல், ஹெல்த் மானிட்டரிங் மற்றும் கனெக்டிவிட்டியில் பிரீமியம் மாடல்களுக்கு நிகரான பீச்சர்களை பேக் செய்துள்ளதால், கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் கிடைப்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பும் இந்திய மார்கெட்டில் இருக்கிறது. முழு பீச்சர்களை பார்ப்போம்.
ரெட்மி வாட்ச் 6 அம்சங்கள் (REDMI Watch 6 Specifications): இந்த ரெட்மி மாடலில் 2.07 (432 x 514 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 324 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. அவுட்டோரில் பக்கா அவுட்புட் கொடுக்கும்படி 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2 எம்எம் அல்ட்ரா-நேரவ் பெசல் கிடைக்கிறது.
மெட்டாலிக் பாடி கிடைக்கிறது. ஆகவே, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குரோவ்ன் மற்றும் டூயல்-பட்டன் கொண்ட கன்ட்ரோல் கிடைக்கிறது. மொத்தமாக 9.9 எம்எம் பாடி கிடைக்கிறது. இந்த பாடியில் 550mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 12 நாட்களுக்கு டைப்பிகல் பேக்கப் கிடைக்கும். ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மோடில் 7 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
ஸ்டாண்ட்பை மோடில் மொத்தமாக 24 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), கைரோஸ்கோப் (Gyroscope), ஹார்ட் ரேட் (Heart Rate) ஆம்பியன்ட் லைட் (Ambient Light) மற்றும் ஜியோமேக்னட்டிக் (Geomagnetic) போன்ற பெரும்பாலான சென்சார்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் மற்றும் எஸ்பிஓ2 மானிட்டர் கிடைக்கிறது.
இதுபோக ஸ்லீப் மானிட்டர், ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டர் மற்றும் வுமன் ஹெல்த் டிராக்கர்கள் கிடைக்கின்றன. வாக்கிங், ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங் போன்ற 150+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Mode) கிடைக்கின்றன. ஸ்விம்மிங் மோட் இருப்பதால், அதற்கு ஏற்ப 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. சியோமி ஸ்போர்ட்ஸ் ஹெல்த் (Xiaomi Sports Health) ஆப் கிடைக்கிறது.
இதன் மூலம் ஹெல்த் டேட்டாக்களை டிராக் கொள்ளலாம். சியோமி நிறுவனத்தில் செல்ப் டெவலப்ட் ஏஎப்இ சிப் (AFE Chip) கிடைக்கிறது. ஸ்மார்ட்வாட்ச்களுக்கான என்ஹான்ஸ் செய்யப்பட்ட ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) கிடைக்கிறது. இந்த சியோமி வாட்ச் 6 மாடலின் கனெக்டிவிட்டியை பார்க்கையிஸ் ஜிஎன்எஸ்எஸ் (GNSS), என்எப்சி (NFC), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது.
ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல், வெதர் அப்டேட்கள், வாய்ஸ் அசிஸ்டன்ஸ், என்எப்சி பேமெண்ட்கள் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ரெட்மி வாட்ச் 6 மாடலின் விலை ரூ.7,367ஆக இருக்கிறது. லூனார் சில்வர் (Lunar Silver), கிளாசிக் பிளாக் (Classic Black), மிஸ்டி ப்ளூ (Misty Blue) கலரில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








