Home
Gadgets

வேற மாறிங்க இவரு.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ட்.. 24 நாட்கள் பேட்டரி.. ஹைப்பர் ஓஎஸ்.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, சியோமி ஹைப்பர் ஓஎஸ், 50 மீட்டர்கள் வாட்டர் ரெசிஸ்டன்ட், 24 நாட்களுக்கு பேட்டரி பேக்கப், ஆப்டிகல் ஹார்ட்ரேட் சென்சார், 20+ வைப்ரேஷன் மோட்கள், இன்-பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக் போன்ற பீச்சர்களுடன் ரெட்மி வாட்ச் 5 (REDMI Watch 5) மாடலானது குளோபல் மார்கெட்டுக்கு வந்துள்ளது. இந்த ரெட்மி வாட்ச் 5 மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ரெட்மி வாட்ச் 5 மாடலானது இப்போது குளோபல் மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுக்கு ஏற்ப விலையிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. பில்ட்-இன் லீனியர் மோட்டாருடன் பெட்டர் ஹாப்டிக் அவுட்புட் கொடுக்கும் நெக்ஸ்ட் லெவல் மாடலாக வந்திருக்கிறது.

வேற மாறிங்க இவரு.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ட்.. எந்த வாட்ச்?

ரெட்மி வாட்ச் 5 அம்சங்கள் (REDMI Watch 5 Specifications): இந்த ரெட்மி மாடலில் ஸ்மார்ட்போன்களை போலவே சியோமி ஹைப்பர் ஓஸ் (Xiaomi Hyper OS) கிடைக்கிறது. ஆகவே, யுஐ கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனை போலவே இருக்கும். இன்-பில்ட் ஸ்பீக்கர் மற்றும் டூயல் மைக்குடன் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கொடுக்கிறது. டயல் & கான்டாக்ட்ஸ் வருகிறது.

இதற்காக ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி இருக்கிறது. மேலும், ஜிஎன்எஸ்எஸ் (GNSS) மற்றும் என்எப்சி (NFC) சப்போர்ட் கிடைக்கிறது. நெக்ஸ்ட் லெவல் ஹாப்டிக்ஸ் அவுட்புட் கொடுக்க லீனியர் வைப்ரேஷன் மோட்டார் (Linear Vibration Motor) கிடைக்கிறது. இதில் 20+ வைப்ரேஷன் மோட் வருகிறது. டிஸ்பிளேவிலும் பட்டையை கிளப்பும் பீச்சர்களை கொடுக்கிறது.

ஆகவே, 2.07 இன்ச் (432 x 514 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளே 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 324 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. அவுட்டோரில் பிரீமியம் அவுட்புட் கொடுக்க 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த ரெட்மி வாட்ச் 5 மாடலில் 200+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் மற்றும் 150+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் வருகின்றன.

பிளட் ஆக்ஸிஜன் சென்சார் (Blood Oxygen Sensor), ஆப்டிகல் ஹார்ட் சென்சார் (Optical Heart Sensor) மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கிடைக்கிறது. மேலும், கைரோஸ்கோப் (Gyroscope), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor) உள்ளது. ஆகவே, பெரும்பான ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) மற்றும் ஹெல்த் டிராக்கர்களை (Health Trackers) கொடுக்கிறது.

ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker), ஸ்ட்ரெஸ் டிராக்கர் (Stress Tracker) மற்றும் வுமன் ஹெல்த் டிராக்கர் (Women Health Tracker) கிடைக்கிறது. இந்த ரெட்மி வாட்ச் 5 மாடலில் 550mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி மூலம் அதிகபட்சமாக 24 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.

ஸ்விம்மிங் பிரியர்களுக்கு 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ரெசிஸ்டன்ட் மூலம் 50 மீட்டர்கள் ஆழம் வரையில் இந்த மாடலை பயன்படுத்தி கொள்ளலாம். வெதர் அப்டேட், கேமரா கன்ட்ரோல், மியூசிக் கன்ட்ரோல் போன்ற வழக்கமான பீச்சர்களை இந்த ரெட்மி வாட்ச் 5 மாடலும் கொடுக்கிறது. 33.5 எடையில் ஓரளவுக்கு லைட் வெயிட் கொடுக்கிறது.

சிலிகான் ஸ்ட்ராப்பில் அப்சிடியன் பிளாக் (Obsidian Black), லாவெண்டர் பர்பிள் (Lavender Purple) மற்றும் சில்வர் கிரே (Silver Gray) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ரெட்மி வாட்ச் 5 மாடலின் விலை ரூ.9,660ஆக இருக்கிறது. சீனாவில் முதலில் வெளியாகியது. இப்போது, குளோபல் மார்கெட்டுக்கு வந்துள்ளது. ஆகவே, விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMI Watch 5 with AMOLED Display 5ATM Water Resistant Goes Global Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X