புரட்டிப்போடும் பட்ஜெட்.. SIM கார்டு.. AMOLED டிஸ்பிளே.. 550mAh பேட்டரி.. 5ATM ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?
வாங்குனா, இப்படிவொரு ஸ்மார்ட்வாட்ச் வாங்கனும்ங்க என்று சொல்லும்படி சிம் கார்டு சிலாட், அமோலெட் டிஸ்பிளே, 550mAh பேட்டரி, 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட், ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் ஹெல்த் டிராக்கர்கள் போன்ற பீச்சர்களுடன் ரெட்மி வாட்ச் 5 (REDMI Watch 5) வெளியாகி இருக்கிறது. ஸ்மார்ட்போனுக்கு நிகராக சிப்செட், ஓஸ், ஆப் ஆகிவற்றுடன் வந்திருக்கும் இந்த ரெட்மி வாட்ச் 5 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது ரெட்மி வாட்ச். இதன் பீச்சர்கள் இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ளது. அடுத்த சில வாரங்களில் இங்கு எதிர்பார்க்கலாம். இந்த ரெட்மி வாட்ச் 5 பேசிக் மாடலின் விலை ரூ.6,975ஆக இருக்கிறது. ஈசிம் மாடலின் விலை ரூ.9,305ஆக இருக்கிறது.

ரெட்மி வாட்ச் 5 அம்சங்கள் (REDMI Watch 5 Specifications): இந்த ரெட்மி மாடலில் சியோமி ஹைபர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கொண்ட ஏஎப்இ (AFE) சிப்செட் வருகிறது. இந்த ஹைபர்ஓஎஸ் மூலம் சியோமி ஸ்மார்ட் டிவைஸ் கன்ட்ரோல் (Xiaomi Smart Device Control) மற்றும் சியோமி சிஸ்டம் ஆப்ஸ் (Xiaomi System Apps) கிடைக்கிறது.
ஆகவே, ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் எல்இடி, ஸ்மார்ட் ஏசி போன்ற டிவைஸ்களை கன்ட்ரோல் செய்ய முடியும்.வாய்ஸ் கன்ட்ரோல்கள் செய்து கொள்ள ஸ்மார்ட் அசிஸ்டன்ட் (Smart Assistant) வருகிறது. டிஸ்பிளேவில் ஸ்மார்ட்போனுக்கு நிகரான பீச்சர்கள் வருகின்றன. 2.07 இன்ச் (432 x 514 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 324 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. மிஸ்-டச் கன்ட்ரோல் கிடைக்கிறது. 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைப்பதால், ஸ்விம்மிங் பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும். இந்த ரெட்மி மாடலில் 200+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் கிடைக்கிறது.
ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெட்விட்டியுடன் ப்ளூடூத் வாய்ஸ் காலிங் (Bluetooth Voice Calling) கிடைக்கிறது. இந்த வாய்ஸ் காலிங்கில் டூயல்-மேட் இன்டர்காம் (Dual-mode Intercom) பீச்சர் இருக்கிறது. 200 மீட்டர்கள் வரையில் இதன் மூலம் ரேஞ்ச் கிடைக்கும். அதேபோல மல்டி-பர்சன் இன்டர்காம் (Multi-person Intercom) பீச்சரும் வருகிறது.
இந்த ரெட்மி வாட்ச் 5 மாடலில் ஈசிம் (eSIM) சிலாட் இருக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டயல் பேட் போன்ற ஸ்மார்ட்போனுக்கு நிகரான பீச்சர்கள் கிடைக்கின்றன. ஜிஎன்எஸ்எஸ் (GNSS), என்எப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டிகளும் இருக்கின்றன. சியோமி ஸ்போர்ட்ஸ் ஹெல்த் (Xiaomi Sports Health) ஆப் உள்ளது.
இதன் மூலம் 150+ ஸ்போர்ட்ஸ் மோட்களை டிராக்கிங் செய்து கொள்ளலாம். 550mAh பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. இந்த பேட்டரி மூலம் 24 நாட்கள் பேக்கப் பெற்று கொள்ளலாம். ஈசிம் மோடில் (eSIM) 12 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். லீனியர் மோட்டார் (Linear Motor) இருக்கிறது. இந்த மோட்டாரில் 20+ வைப்ரேஷன் மோட்கள் இருக்கின்றன.
ஆக்டிவிட்டி டிராக்கர், ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்லீப் டிராக்கர், ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர், ப்ரீதிங் பிராக்டிஸ் போன்றவை கிடைக்கின்றன. கேமரா, மியூசிக் கன்ட்ரோல் போன்ற ஸ்மார்ட் பீச்சர்கள் இருக்கின்றன. எலிகன்ட் பிளாக் (Elegant Black), பிரைட் மூன் சில்வர் (Bright Moon Silver), ப்ளோட்டிங் லைட் டைட்டானியம் (Floating Light Titanium) கலர்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications