ஆளுக்கு 1 ஆர்டர்.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 18 நாட்கள் பேட்டரி.. அறிமுகமானது Redmi வாட்ச்..
ரெட்மி நிறுவனம் இன்று இந்தியாவில் ரெட்மி வாட்ச் 5 லைட் (Redmi Watch 5 Lite) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக அமோலெட் ஸ்கிரீன், 470mAh பேட்டரி, ப்ளூடூத் காலிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி வாட்ச் 5 லைட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ரெட்மி வாட்ச் 5 லைட் அம்சங்கள் (Redmi Watch 5 Lite Specifications): 1.96 இன்ச் அமோலெட் ஸ்கிரீன் (AMOLED screen) கொண்டுள்ளது. மேலும் 410 x 502 பிக்சல்கள், 600 நிட்ஸ் பிரைட்னஸ், 200க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்கள் (watch faces) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

ரெட்மி வாட்ச் 5 லைட் மாடலில் ப்ளூடூத் வி5.3 எல்இ (Bluetooth v5.3 LE) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 6.0 (Android 6.0) மற்றும் ஐஓஎஸ்12 (iOS 12) ஆகிய ஓஎஸ்கள்முதல் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) அம்சத்துடன் இன்பில்ட் மைக்ரோபோன் (Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி வாட்ச் 5 லைட் மாடல். அதேபோல் கிளியர் வாய்ஸ் கால் கொடுக்கும் வகையில் 3-மைக் ENC கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்.
குறிப்பாக ஆக்டிவிட்டி டிராக்கிங் (Activity Tracking), ஸ்லீப் மானிட்டர், (Sleep Monitor), ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress Monitor), பீரியட் சைக்கிள் மானிட்டர் (Period Cycle Monitor) ஹெல்த் ஆகிய மானிட்டர்கள் (Health Monitors) உடன் புதிய ரெட்மி வாட்ச் 5 லைட் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இதை நம்பி வாங்கலாம்.
மேலும் ஹாட் ரேட் சென்சார் (Heart Rate Sensor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் சென்சார் (Blood Oxygen Level Sensor), ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), கைரோஸ்கோப் (Gyroscope) போன்றவை இந்த ரெட்மி வாட்ச் 5 லைட் மாடலில் உள்ளன. இதுதவிர பல அசத்தலான அம்சங்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளன.
அதன்படி தியேட்டர் மோட் (Theatre Mode), பைண்ட் மை போன் (Find My Phone), ஷட்டர் கேமரா (Shutter Camera), டார்ச் (Torch), டைமர் (Timer), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), வாட்டர் கிளியரிங் மோட் (Water Clearing Mode), அலாரம் (Alarm)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ரெட்மி வாட்ச் 5 லைட் மாடலில் உள்ளன.

5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் (5ATM water-resistant) கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச். மேலும் 470mAh பேட்டரியுடன் புதிய ரெட்மி வாட்ச் 5 லைட் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் 18 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கொடுக்கும் என நிறுவனம் கூறுகிறது. பின்பு பிளாக் (Black) மற்றும் லைட் கோல்ட் (Light Gold) நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும்.
எம்ஐ.காம் தளத்தில் இன்று விற்பனைக்கு வருகிறது இந்த ரெட்மி வாட்ச் 5 லைட் மாடல். பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.3,999-ஆக உள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு அறிமுகம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனவே இன்று இரவு எம்ஐ.காம் தளத்தில் ரூ.3,499 விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications