இதுதான் ஸ்மார்ட்வாட்ச்.. மலிவு விலை.. 18 நாட்கள் பேட்டரி.. ப்ளூடூத் காலிங்.. எந்த மாடல்? எப்போது விற்பனை?
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனம் ரெட்மி தனது புதிய ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் (Redmi Watch 5 Active) மாடலை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக எல்சிடி டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், 470mAh பேட்டரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் அம்சங்கள் (Redmi Watch 3 Active Specifications):: 1.83 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் 240 × 280 பிக்சல்கள், 500 நிட்ஸ் பிரைட்னஸ், 200க்கும் மேற்பட்ட கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

அதேபோல் ப்ளூடூத் வி5.3 எல்இ (Bluetooth v5.3 LE) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்வாட். மேலும் இது ஆண்ட்ராய்டு 6.0 (Android 6.0) மற்றும் ஐஓஎஸ்12 (iOS 12) ஆகிய ஓஎஸ்கள் முதல் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) அம்சத்துடன் இன்பில்ட் மைக்ரோபோன் (Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் மாடல். கிளியர் வாய்ஸ் கால் கொடுக்கும் வகையில் 3-மைக் ENC கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்.
ஆக்டிவிட்டி டிராக்கர் (Activity Tracking), ஸ்லீப் மானிட்டர், (Sleep Monitor), ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress Monitor), பீரியட் சைக்கிள் மானிட்டர் (Period Cycle Monitor) ஹெல்த் ஆகிய மானிட்டர்கள் (Health Monitors) உடன் புதிய ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் மாடல் வெளிவந்துள்ளது.
எனவே இதை நம்பி வாங்கலாம்.
குறிப்பாக ஹாட் ரேட் சென்சார் (Heart Rate Sensor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் சென்சார் (Blood Oxygen Level Sensor), ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), கைரோஸ்கோப் (Gyroscope), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor) போன்றவை இந்த ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளன.
தியேட்டர் மோட் (Theatre Mode), பைண்ட் மை போன் (Find My Phone), ஷட்டர் கேமரா (Shutter Camera), டார்ச் (Torch), டைமர் (Timer), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), வாட்டர் கிளியரிங் மோட் (Water Clearing Mode), அலாரம் (Alarm)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளன.
140 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோட்கள் (Sports Modes)கொண்டுள்ளன ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் மாடல். மேலும் IPX8 வாட்டர் ரெசிஸ்டன்ட் (water resistant) உடன் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் மாடலின் எடை 42.2 கிராம் ஆகும். எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

470mAh பேட்டரியுடன் புதிய ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் 18 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கொடுக்கும் என நிறுவனம் கூறுகிறது. பின்பு மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் மேட் சில்வர் (Matte Silver) நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும்.
எம்ஐ.காம், பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இந்த ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் மாடல். பின்பு இதன் விலை ரூ.2,799-ஆக உள்ளது. மலிவு விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்வாட்ச் எதிர்பார்க்கும் பயனர்கள் இதை வாங்குவது நல்லது.


Click it and Unblock the Notifications








