Home
Gadgets

மிரளுது பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் அமோலெட் டிஸ்பிளே, ஹெல்த் மானிட்டர், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட், ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, 470mAh பேட்டரி போன்ற பக்கா ப்ரீமியம் அம்சங்களுடன் ரெட்மி வாட்ச் 4 (Redmi Watch 4) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

ரெட்மி வாட்ச் 4 அம்சங்கள் (Redmi Watch 4 Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.97 இன்ச் (390 x 450 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ரெட்மி போன்களில் கொடுக்கப்படும் சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) சப்போர்ட் வருகிறது.

மிரளுது பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. எந்த மாடல்?

இந்த ரெட்மி வாட்ச்சில் பெரும்பாலான சென்சார்கள் (Sensors) மற்றும் ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன. அந்த வகையில், ஆக்சிலெரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோ சென்சார் (Gyro Sensor), ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் சென்சார் (Blood Oxygen Level Sensor) வருகின்றன.

அதேபோல ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor) சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஹெல்த் மானிட்டர்களை பொறுத்தவரை, டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கிங் (Daily Activity Tracking), ஃபீமேல் மென்சுரல் சைக்கிள் டிராக்கிங் (Female Menstrual Cycle Tracking), ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் (Stress Monitoring) வருகிறது.

அதோடு ப்ரீத் டிரெய்னிங் (Breath Training) மற்றும் ஸ்லீப் மானிட்டரிங் (Sleep Monitoring) கொண்டிருக்கிறது. இந்த ரெட்மி வாட்ச் 4 மாடலில் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 150+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) மற்றும் வாய்ஸ் கோச் (Voice Coach) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மிரளுது பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. எந்த மாடல்?

இந்த ரெட்மி வாட்ச்சின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், ஜிபிஎஸ் (GPS), கலிலியோ (Galileo), குளோனாஸ் (Glonass) ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன. இந்த மாடலில் 470mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் டைபிகல் மோடில் (Typical Mode) 20 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

அதேபோல ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மோடில் (AOD Mode) 10 நாட்களுக்கு பேக்கப் எதிர்பார்க்கலாம். மேலும், ஸ்டான்ட்பை மோடில் (Standby Mode) தொடர்ந்து 30 நாட்களுக்கு பேட்டரி லைப் கிடைக்கும். ஆகவே, இந்த வாட்ச்சில் பேட்டரி தொடர்பான பிரச்சனை இருக்காது. அதேபோல ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் கொண்டிருக்கிறது.

இந்த ரெட்மி வாட்ச் 4 மாடலின் ஸ்ட்ராப் மெட்டீரியலை (Strap Material) பொறுத்தவரை புளோரோரப்பர் (Fluororubber) மற்றும் லெதர் (Leather) கொண்டுள்ளது. மொத்தமாக 31.5 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. எலிகன்ட் பிளாக் (Elegant Black) மற்றும் சில்வர் ஸ்னோவ் வைட் (Silver Snow White) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இருப்பினும், ஸ்ட்ராப் டிசைனில் மெட்டாலிக் (Metallic), லெதர் (Leather) மற்றும் லைலான் (Nylon) ஆகிய வேரியண்ட்கள் இருக்கின்றன. இந்த ரெட்மி வாட்ச் 4 மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்துவிட்டது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும் வெறும் ரூ.5,957 மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால், நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மிரளுது பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. எந்த மாடல்?

இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. மிரட்டலான ப்ரீமியம் வாட்ச் வாங்க நினைப்பவர்களுக்கு, மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, ஹெல்த் மானிட்டர்கள், ஜிபிஎஸ் மற்றும் 470mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட இந்த வாட்ச் நல்ல தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Redmi Watch 4 With AMOLED Display, HyperOS on Sale in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X