போடு! ஆப்பிள் வாட்சை இனி யாரும் விரும்ப மாட்டாங்க! அதான் Redmi Watch 3 Lite இருக்கே!
தென் கொரியாவின் NRRA சான்றிதழ் இணையதளத்தில் M2247W1 மாடல் எண் கொண்ட ஒரு மர்மமான Redmi ஸ்மார்ட்வாட்சை பார்த்ததாக சில வந்தந்திகள் பரவியது. உற்று நோக்கிய போது, அது ரெட்மியின் புதிய ரெட்மி வாட்ச் 3 லைட் சாதனம் என்பது தெரியவந்தது.
இணையத்தில் காணப்பட்ட பட்டியல் தகவல் படி, இது ஸ்மார்ட்வாட்ச்சின் வடிவமைப்பையும் வேறு சில முக்கிய விவரங்களையும் வெளிப்படுத்தியது. இப்போது, அதே சாதனம் ரெட்மி வாட்ச் 3 லைட் மோனிக்கரைக் கொண்ட SIRIM தரவுத்தளத்தில் காணப்பட்டது. SIRIM பட்டியலின் படி, Redmi M2247W1 ஸ்மார்ட்வாட்ச் ரெட்மி வாட்ச் லைட் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பட்டியல் மேலும் எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை, இருப்பினும், வரவிருக்கும் நாட்களில் உலகளவில் இந்த Redmi Watch 3 Lite ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்த Realme தயாராகி வருகிறது என்பது தெளிவாகிறது. கடந்த மாதம், Redmi Watch 3 Lite ஆனது EEC சான்றிதழ் இணையதளத்தில் 2.87V பாலிமர் Li-ion உள்ளமைக்கப்பட்ட பேட்டரியுடன் புளூடூத் v5 ஆதரவுடன் காணப்பட்டது.
முந்தைய என்ஆர்ஆர்ஏ பட்டியலிலிருந்து, ரெட்மி வாட்ச் 3 லைட் ஒரு செவ்வக டயலைக் கொண்டுள்ளது. வாட்ச் பக்கத்தில் ஒரு ஒற்றை பொத்தானைக் கொண்டிருக்கும். மேலும் பிரிக்கக்கூடிய பட்டைகளையும் கொண்டிருக்கும். சாதனத்தின் அடிப்பகுதியில் இதய துடிப்பு சென்சார் மற்றும் மேக்னெட்டிக் சார்ஜிங் போர்ட் ஆகியவை உள்ளன.
இந்த ஸ்மார்ட்வாட்ச் மைக்ரோஃபோனைக் கொண்டிருக்கவில்லை என்று தோன்றுகிறது. இது புளூடூத் அழைப்பு செயல்பாடு இல்லாததைக் குறிக்கிறது. ரெட்மி வாட்ச் 3 லைட் பதிப்பில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை அறிய Redmi Watch 3 ஐ பார்ப்போம். ரெட்மி வாட்ச் 3 விவரக்குறிப்புகள் பற்றி பார்க்கையில், ரெட்மி வாட்ச் 3 கடந்த டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 1.75' இன்ச் AMOLED டிஸ்ப்ளே ஒரு சதுர டயலுடன், HD தெளிவுத்திறன் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது.
இதன் பீக் பிரைட்னஸ் 600 நிட்கள் உடன் வருகிறது. இது 50 மீட்டர் ஆழம் வரை நீர்ப்புகா மற்றும் வலது பக்கத்தில் ஒரு பொத்தானைக் கொண்டுள்ளது. பல்வேறு சுகாதார கண்காணிப்பு அம்சங்களுடன் கூடிய Redmi Watch 3 இதய துடிப்பு மானிட்டர், SpO2 சென்சார், ஸ்லீப் மற்றும் ஸ்ட்ரெஸ் டிராக்கர், சுவாச உடற்பயிற்சி மற்றும் பெண்களின் மாதவிடாய் சுழற்சி மானிட்டர் ஆகியவற்றுடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 120-க்கும் மேற்பட்ட பயிற்சிகளை ஆதரிக்கிறது. இதில் GPS அம்சம் இடம்பெறுகிறது. ரெட்மி வாட்ச் 3 புளூடூத் குரல் அழைப்பு, அவசரகால SOS பயன்முறை மற்றும் பிற வசதியான அம்சங்களையும் வழங்குகிறது. இது 289mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரை உபயோகத்தை வழங்குகிறது.
இது இந்தியாவில் மலிவு விலையில் அல்லது பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட்வாட்ச் வாங்க விரும்பும் நபர்களுக்கு இந்த Redmi Watch 3 Lite மாடல் ஒரு அற்புதமான சாய்ஸ் ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாட்சின் மற்ற விபரங்களை விரைவில் அப்டேட் செய்கிறோம். அதுவரை எங்களுடன்இணைந்து காத்திருங்கள்.


Click it and Unblock the Notifications








