Redmi அறிமுகம் செய்த 2 புது ஸ்மார்ட்வாட்ச்.! கம்மி விலையில் கலர்ஃபுல்லான வாட்ச்.!

|

ரெட்மி (Redmi) நிறுவனம் இன்று ரெட்மி வாட்ச் 3 (Redmi Watch 3) மற்றும் ரெட்மி பேண்ட் 2 (Redmi Band 2) ஆகியவை ரெட்மி கே60 சீரிஸ் மற்றும் ரெட்மி பட்ஸ் 4 லைட் (Redmi Buds 4 Lite) ஆகியவற்றுடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் ரெட்மி வாட்ச் 2 மற்றும் ரெட்மி பேண்ட் ஆகியவற்றின் பின்தொடர்தல்களாக வருகின்றது. இதன் விலை மற்றும் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Redmi Watch 3 ஆனது 390 X 450 பிக்சல்கள் தீர்மானம், 60Hz உயர் ரெப்ரெஷ் ரேட் உடன் 341 PPI உடன் 1.75' இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 200 வாட்ச் பேஸ் அம்சங்களுடன் வருகிறது. இதில் ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், ரத்த ஆக்சிஜன், கைரோஸ்கோப் மற்றும் ஜியோமேக்னடிக் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் 24 மணி நேர இதயத் துடிப்பு, கலோரி கவுண்ட, ஸ்லீப் மானிட்டர், பிரஷர், பரீத் மற்றும் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிக்கிறது.

Redmi அறிமுகம் செய்த 2 புது ஸ்மார்ட்வாட்ச்.! கம்மி விலையில் வாட்ச்.!

Redmi Watch 3 சிறப்பம்சங்கள்

ரெட்மி வாட்ச் 3 புளூடூத் 5.2 வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் iOS 12 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றுடன் இணக்கமானது. இதில் வாய்ஸ் கால் செய்வதற்கான ஹேண்ட்ஸ் ஃப்ரீ காலிங் ஆதரவும் உள்ளது. குரல் அழைப்புகள், ஸ்பீக்கர், NFC, SOS எமெர்ஜென்சி, வாய்ஸ் அசிஸ்டன்ட், ஸ்மார்ட் கண்ட்ரோல் மற்றும் நோட்டிபிகேஷன், இன்பில்ட் மைக்ரோஃபோன் போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.

இதில் Beidou, GPS, GLONASS, GALILEO, QZSS மற்றும் NFCக்கான ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 121+ ஸ்போர்ட்ஸ் மோடுகளைக் கண்காணிக்கிறது. இது 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் நீர் எதிர்ப்பிற்காக மதிப்பிடப்பட்டுள்ளது. Redmi Watch 3 ஆனது 289mAh பேட்டரியுடன் வருகிறது. இது 12 நாட்கள் வரை நீடிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Redmi அறிமுகம் செய்த 2 புது ஸ்மார்ட்வாட்ச்.! கம்மி விலையில் வாட்ச்.!

Redmi Band 2 சிறப்பம்சங்கள்

மறுபுறம், Redmi Band 2 ஆனது 1.47 இன்ச் TFT LCD டிஸ்ப்ளேவுடன் 172 X 320 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக இருக்கிறது. இது 247 PPI கொணட 2.5D கர்வுட் டிஸ்பிளேவுடன் மற்றும் 450nits பீக் பிரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஃபிட்னஸ் டிராக்கர் 100+ வாட்ச் ஃபேஸ் ஆதரவுடன் வருகிறது. இது புளூடூத் 5.1 LE வழியாக இணைக்கிறது. இதுவும் Android 6 மற்றும் அதற்கு மேற்பட்ட அல்லது iOS 12 அல்லது அதற்கு மேற்பட்ட மடல்களுடன் இணக்கமானது.

இந்த ஃபிட்னஸ் டிராக்கர் 30+ ஸ்போர்ட்ஸ் மோடு கண்காணிப்புடன் வருகிறது. இது 24×7 இதயத் துடிப்பு கண்காணிப்பு, ஒரு SpO2 சென்சார் மற்றும் பெண் ஆரோக்கிய கண்காணிப்பு ஆகியவற்றிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. ரெட்மி பேண்ட் 2 ஆனது 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ரிமோட் கேமரா கண்ட்ரோல், மியூசிக் பிளேபேக், டைமர், வெதர் மற்றும் ஸ்டாப்வாட்ச் என்று பல அம்சங்களை கொண்டுள்ளது. இது 210mAh பேட்டரி உடன் 14 நாட்கள் வரை நீடிக்கிறது.

ரெட்மி வாட்ச் 3 மற்றும் ரெட்மி பேண்ட் 2 விலை மற்றும் விற்பனை விவரங்கள்
ரெட்மி வாட்ச் 3 RMB 499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 5,950 என்ற விலையில் உள்ளது. இது ஏற்கனவே சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கிறது. மறுபுறம், ரெட்மி பேண்ட் 2, RMB 159 விலையில் வருகிறது. இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 1,900 விலையில் ஏற்கனவே சீனாவில் விற்பனையில் உள்ளது. இவை அடுத்த மாதம் இந்தியாவில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Watch 3 and Redmi Band 2 Launched Price Sale Specification Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X