Home
Gadgets

ஆளுக்கொன்னு வாங்கும் விலையில் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்.. 289mAh பேட்டரி, 12 நாட்கள் பேக்கப் வேற.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மலிவான விலைக்கு பக்காவான அம்சங்களுடன் ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் (Redmi Watch 3 Active) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் ப்ளூடூத் காலிங், ஹெல்த் மானிட்டர்கள், நீண்ட பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

நம்மில் பலருக்கு ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நல்ல தரமான ஸ்மார்ட்வாட்ச்சின் விலை குறைந்தது ரூ.5 ஆயிரம் இருக்கும். இதனால், ஆஃபர் வரும்போது, ஸ்மார்ட்வாட்ச் வாங்கிக்கொள்ளலாம் என்று பலர் திட்டம் கூட போட்டிருப்பார்கள். அவர்களுக்கான பொன்னான வாய்ப்பை ரெட்மி நிறுவனம் கொடுத்துள்ளது.

ஆளுக்கொன்னு வாங்கும் விலையில் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்.. எந்த மாடல்?

வெறும் ரூ.2,999 விலைக்கு ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த விலை அறிமுக சலுகை மட்டுமே என்பதால் விரைவில் விலை அதிகரிக்ககூடும். ஆகவே, கம்மி பட்ஜெட்டில் 289mAh பேட்டரி, 12 நாட்கள் பேக்கப், இன்பில்ட் ஸ்பீக்கர்கள் போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட இந்த வாட்ச்சை தவறவிடாதீர்கள். இதை எங்கு ஆர்டர் செய்வது? எப்போது விற்பனைக்கு வரும் உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் அம்சங்கள் (Redmi Watch 3 Active Specifications): இந்த ரெட்மி வாட்ச் 1.83 இன்ச் (240 × 280 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 450 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது. 200க்கும் மேற்பட்ட கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) வருகின்றன. மொத்தமாக 4 சென்சார்கள் (Sensors)கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஹாட் ரேட் சென்சார் (Heart Rate Sensor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் சென்சார் (Blood Oxygen Level Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), கைரோஸ்கோப் (Gyroscope) மற்றும் ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) வருகிறது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது. இதை ஆண்ட்ராய்டு 6.0 (Android 6.0) மற்றும் ஐஓஎஸ்12 (iOS 12) ஆகிய ஓஎஸ்கள் முதல் பயன்படும்.

ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) அம்சத்துடன் இன்பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வருகிறது. ஆக்டிவிட்டி டிராக்கர் (Activity Tracking), ஸ்லீப் மானிட்டர், (Sleep Monitor), ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress Monitor), பீரியட் சைக்கிள் மானிட்டர் (Period Cycle Monitor) ஹெல்த் ஆகிய மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன.

அதே போல தியேட்டர் மோட் (Theatre Mode), பைண்ட் மை போன் (Find My Phone), ஷட்டர் கேமரா (Shutter Camera), டார்ச் (Torch), டைமர் (Timer), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), வாட்டர் கிளியரிங் மோட் (Water Clearing Mode) உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன. 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோட்கள் (Sports Modes) வருகின்றன. 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.

289mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி தொடர்ந்து 12 நாட்கள் பேக்கப் கொடுக்கும். மொத்தமாக இந்த வாட்ச் 41.67 கிராம் எடைக்கொண்டுள்ளது. இந்த ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் பிளாட்டினம் கிரே (Platinum Grey), சார்கோல் பிளாக் (Charcoal Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

இப்போதைக்கு ரெட்மி தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அமேசான் அல்லது பிளிப்கார்ட் விற்பனை குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்த வாட்ச் அறிமுக சலுகையில் ரூ.2999 விலைக்கு விற்பனைக்கு வருகிறது. அதேபோல ரூ.499 மதிப்புள்ள ஆலிவ் கிரீன் ஸ்ட்ராப் (Olive Green Strap) ரூ.99க்கு விற்பனைக்கு வருகிறது.

மலிவான விலையில் பட்டாசான அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச் வாங்க விரும்பினால், இதுவொரு நல்ல தேர்வாக இருக்கும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Watch 3 Active With LCD Display, 289mAh Battery Launched in India Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X