Home
Gadgets

98-இன்ச் டிவியை அறிமுகம் செய்த Redmi.. 4K ரெசல்யூஷன்.. 64ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி (Redmi) நிறுவனம் தனது சமீபத்தில் 85-இன்ச் டிவியை சீனாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் 98-இன்ச் ஸ்மார்ட் டிவியை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரெட்மி டிவி எக்ஸ் 98 2026 மினி எல்இடி ஸ்மார்ட் டிவியை (Redmi TV X 98 2026) தான் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டிவிகள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 98-இன்ச் டிவியின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி டிவி எக்ஸ் 98 2026 அம்சங்கள் (Redmi TV X 98 2026 Specifications): மினி எல்இடி பேனல் உடன் 880 பேக்லைட் ஜோன்ஸ் ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி 98-இன்ச் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 4கே ரெசல்யூஷன் (4K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.

98-இன்ச் டிவியை அறிமுகம் செய்த Redmi.. 4K ரெசல்யூஷன்.. எந்த மாடல்?

அதேபோல் இந்த டிவி சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. அதாவது Qingshan ஐ புரொடெக்சன் (Qingshan Eye Protection) உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதுவும் வன்பொருள் மற்றும் மென்பொருள் இணைப்பை பயன்படுத்தி நீல ஒளியை குறைக்கும் திறனையும், சுற்றுப்புற வெளிச்சத்தின் அடிப்படையில் நிற வெப்பநிலையை தானாக சரிசெய்யும் வசதியையும் கொண்டுள்ளது இந்த டிவி.

குவாட்-கோர் கார்டெக்ஸ்-ஏ73 பிராஸசர் (quad-core Cortex-A73 processor ) உடன் ரெட்மி டிவி எக்ஸ் 98 2026 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி இந்த 98-இன்ச் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

HyperOS 3 மூலம் இந்த புதிய ரெட்மி 98-இன்ச் ஸ்மார்ட் டிவி இயங்குகிறது. மேலும் எச்டிஆர் 10 பிளஸ் சப்போர்ட், 94% டிசிஐ-பி3 கலர் காமட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவியில் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த புதிய ரெட்மி டிவி எக்ஸ் 98 2026 மாடலில் உள்ளன. பின்பு வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR), டால்பி விஷன் கேமிங் (Dolby Vision Gaming), ப்ரீசின்க் பிரீமியம் (FreeSync Premium), 4ms ரெஸ்பான்ஸ் டைம் உள்ளிட்ட கேமிங் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

98-இன்ச் டிவியை அறிமுகம் செய்த Redmi.. 4K ரெசல்யூஷன்.. எந்த மாடல்?

வைஃபை 6, ப்ளூடூத் 5.2, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஆப்டிகல் ஆடியோ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த புதிய ரெட்மி 98-இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

ரெட்மி டிவி எக்ஸ் 98 2026 மாடலின் விலை 7,599 yuan (இந்திய மதிப்பில் ரூ.93,483)-ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி டிவி வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும். குறிப்பாக இந்திய சந்தையிலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி.

photo credit: gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi TV X 98 2026 launched with 64GB Storage: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X