85-இன்ச் ரெட்மி டிவியை அறிமுகம் செய்த Redmi.. 64ஜிபி மெமரி.. 30W ஸ்பீக்கர்கள்.. 4K ரெசல்யூஷன்.. என்ன விலை?
ரெட்மி (Redmi) நிறுவனம் தனது புதிய 85-இன்ச் கொண்ட ரெட்மி டிவி எக்ஸ் 2026 (Redmi TV X 2026) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் பிராசஸர், 64ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
85 இன்ச் ரெட்மி டிவி எக்ஸ் 2026 அம்சங்கள் (Redmi TV X 2026 Specifications): புதிய 85-இன்ச் ரெட்மி டிவி மினி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 2560 x 1440 பிக்சல்ஸ், 4கே ரெசல்யூஷன் (4K Resolution), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1200 nits peak brightness) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபொல் 640 லோக்கல் டிம்மிங் ஸோன்ஸ் (Local Dimming Zones), AI அப்ஸ்கேலிங், எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த ரெட்மி 85-இன்ச் டிவியில் உள்ளன.
வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) ஆதரவு இந்த டிவியில் உள்ளது. பின்பு கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் டால்பி விஷன் கேமிங் சப்போர்ட்(Dolby Vision Gaming support), ஏஎம்டி ப்ரீசிங்க் ப்ரீமியம் (AMD FreeSync Premium) போன்ற அசத்தலான அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவி சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் எம்டி9655 (MediaTek MT9655) குவாட் கோர் பிராசஸர் உடன் இந்த 85 இன்ச் ரெட்மி டிவி எக்ஸ் 2026 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் HyperOS 3 மூலம் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி இயங்குகிறது.
மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் புதிய ரெட்மி டிவியில் உள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த அட்டகாசமான 85 இன்ச் ரெட்மி டிவி எக்ஸ் 2026 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) ஆதரவும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவியில் உள்ளது. 30W ஸ்பீக்கர்கள் வசதியுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு டூயல் பேண்ட் வைஃபை 6, புளூடூத் 5.2, ஏர்ப்ளே, ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) உள்ளிட்ட அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன்புட், ஈதர்நெட், ஆப்டிகல் ஃபைபர் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த 85 இன்ச் ரெட்மி டிவி எக்ஸ் 2026 மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
தற்போது 85 இன்ச் ரெட்மி டிவி எக்ஸ் 2026 மாடல் ஆனது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த ரெட்மி டிவி உலக சந்தை மற்றும் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ரெட்மி 85-இன்ச் டிவியின் விலை 4800 yuan (இந்திய மதிப்பில் ரூ.59,760) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








