அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் ரெட்மி 70-இன்ச் டிவி அறிமுகம்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி பிராண்ட் தற்போது ரெட்மி நோட் 8 மற்றும் நோட் 8 ப்ரோ சாதனங்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி மற்றும் ரெட்மிபுக் 14 எனப்படும் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக ரெட்மி லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவி மாடலும் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுளளது, இப்போது முதலில் ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான ஸ்கிரீன்:
ரெட்மி 70-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே மற்றும் எச்டிஆர் ஸ்கிரீன் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 6-வது தலைமுறை அம்லோஜிக் 64-பிட் சிப்செட்இ ஒரு கார்டெக்ஸ்-ஏ 53 குவாட்-கோர் சிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

சேமிப்பு வசதி:
இந்த ரெட்மி 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி 1.5ஜிகிஹெர்ட் மாலி-450 எம்பி3 ஜிபியு வசதியுடனும் வெளிவந்துள்ளது, பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்:
ரெட்மி 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியில் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 4.2., மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், ஈதர்நெட் போர்ட், எஸ் ஃ பி.டி.ஐ.எஃப் மற்றும் ஏ.வி போர்ட்கள் உள்ளன. குறிப்பாக சியோமி டிவியில் இருக்கும் பேட்ச்வால் யுஐ வசதி இந்த ஸ்மார்ட் டிவி சாதனத்திலும் இடம்பெற்றுள்ளது.

அட்டகாசமான விலை:
ரெட்மி 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியில் மேம்பட்ட ஆடியோவிற்கு டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்-எச்டி ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் இந்திய விலை மதிப்பு ரூ.38,600-ஆக உள்ளது.

ரெட்மிபுக் 14:
ரெட்மிபுக் 14 சாதனம் பொதுவாக 10 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 7-10510 யூ செயலி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பகத்துடன் சிறந்த வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 10 மணி நேர பேட்டரி ஆதரவு,3.5 ஹெட்போன் ஜாக், ஒரு யூ.எஸ்.பி 2.0 போர்ட், ஒரு எச்.டி.எம்.ஐ போர்ட், இரண்டு யூ.எஸ்.பி 3.0 போர்ட்கள், சார்ஜிங் போர்ட், வைஃபை மற்றும் புளூடூத் ஆதரவு இதில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.40,600-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications