இந்த ரெட்மி டிவிக்கு பல பேர் வெயிட்டிங்.. பட்ஜெட் விலை.. 4K டிஸ்பிளே.. 32ஜிபி ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரெட்மி டிவி ஏ32, ஏ43, ஏ65 மாடல்களை அறிமுகம் செய்தது. அதன்பின்பு கடந்த ஆகஸ்ட் மாதம் ரெட்மி டிவி ஏ50 2024 மாடலை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது ரெட்மி டிவி ஏ75 2024 (Redmi TV A75 2024) எனும் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது புதிய 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. ஆனால் ரெட்மி டிவி ஏ75 2024 எனும் 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது ரெட்மி டிவி ஏ75 2024 மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த புதிய 75-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது மெட்டல் பாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் இந்த 75-இன்ச் ஸ்மார்ட் டிவி டிஸ்பிளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் 1.07 பில்லியன் வண்ணங்கள் வழங்கும் இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்குகிறது இந்த 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.
டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஆடியோ அம்சங்களைக் கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த புதிய 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி டிவி.
மிகவும் சக்திவாய்ந்த குவாட்-கோர் ஏ35 சிப் உடன் இந்த ரெட்மி டிவி ஏ75 2024 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சிப் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்த பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய 75-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி.
அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி டிவி ஏ75 2024 மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் யூடியூப், நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாயஸ் அசிஸ்டண்ட், குரோகாஸ்ட் உள்ளிட்ட அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது ரெட்மி டிவி ஏ75 2024 மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி
உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் வரும். யூடியூப், நெட்ஃபிக்ஸ் உள்ளட்ட ஷார்ட் கட் கீ கொண்டுள்ளது இந்த டிவியின் ஸ்மார்ட் ரிமோட். மேலும் இந்த ரிமோட்டில் ஒரு குயிக் வேக் அம்சமும் அடங்கும். இது ஐந்து வினாடிகளுக்குள் டிவியை இயக்க உதவும் என்று கூறப்படுகிறது.
75-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடலில் வயர்லெஸ் இணைப்பு விருப்பங்களில் டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் வி 5.0 ஆகியவை அடங்கும். மேலும் லேட்டஸ்ட் மிராக்காஸ்ட் ஆப், ஆட்டோ லோ லேடென்சி மோட் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவியில இடம்பெற்றுள்ளன. எனவே இந்த டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி 2.0, ஏவி, 3.5MM ஹெட்ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள் அனைத்து தரமான உள்ளது.
அதேபோல் இந்த ரெட்மி டிவி ஏ75 2024 மாடலின் விலை 3099 Yuan ( இந்திய மதிப்பில் ரூ.35,400) ஆக உள்ளது. அதாவது இந்த 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








