Home
Gadgets

செப்டம்பர் 17: இந்தியாவில் 70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

ஏற்கனவே சீனாவில் 70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 17-ம் தேதி இந்தியாவிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரெட்மி நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்
இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

செப்டம்பர் 17

செப்டம்பர் 17

அன்மையில் சியோமியின் அதிகாரப்பூர்வ இந்திய ட்விட்டர் கணக்கில் டி.வி. தோன்றுவதைக் காட்டும் டீசரைப் பகிர்ந்துள்ளது. அதில் செப்டம்பர் 17 ஆம் தேதி 'ஸ்மார்ட்டர் லிவிங் 2020' வெளியீட்டு தேதியை முக்கியமாக குறிப்பிட்டுள்ளது. இருந்தபோதிலும் சியோமி இன்னும் இந்த புதிய தயாரிப்பின் பெயரை வெளியிடவில்லை.

அசத்தலான ஸ்கிரீன்

ரெட்மி 70-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே மற்றும் எச்டிஆர் ஸ்கிரீன் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 6-வது தலைமுறை அம்லோஜிக் 64-பிட் சிப்செட்இ ஒரு கார்டெக்ஸ்-ஏ 53 குவாட்-கோர் சிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

சேமிப்பு வசதி:

இந்த ரெட்மி 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி 1.5ஜிகிஹெர்ட் மாலி-450 எம்பி3 ஜிபியு வசதியுடனும் வெளிவந்துள்ளது, பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்:

ரெட்மி 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியில் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 4.2., மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், ஈதர்நெட் போர்ட், எஸ் ஃ பி.டி.ஐ.எஃப் மற்றும் ஏ.வி போர்ட்கள் உள்ளன. குறிப்பாக சியோமி டிவியில் இருக்கும் பேட்ச்வால் யுஐ வசதி இந்த ஸ்மார்ட் டிவி சாதனத்திலும் இடம்பெற்றுள்ளது.

அட்டகாசமான விலை:

ரெட்மி 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியில் மேம்பட்ட ஆடியோவிற்கு டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்-எச்டி ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் இந்திய விலை மதிப்பு ரூ.38,600-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi TV 70 May Launch in India on September 17 and more details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X