Home
Gadgets

மலிவு விலையில் ரெட்மி நிறுவனத்தின் 40-இன்ச் டிவி அறிமுகம்.!

ரெட்மி நிறுவனம் மலிவு விலையில் தனது 40-இன்ச் டிவி மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி மாடல் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் கண்டிப்பாக அதிக வரவேற்ப்பை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1920x1080 பிக்சல்

1920x1080 பிக்சல்

இப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட 40-இன்ச் ரெட்மி டிவி ஆனது முழு எச்டி(Full HD) ஸ்கிரீன் வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 60Hz refresh rate, 178 டிகிரி கோணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

கார்டெக்ஸ்-ஏ53 குவாட்-கோர்ட்

கார்டெக்ஸ்-ஏ53 குவாட்-கோர்ட்

இந்த 40-இன்ச் ரெட்மி டிவி சாதனத்தின் மென்பொருள் அமைப்பிற்குக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது,அதன்படி
கார்டெக்ஸ்-ஏ53 குவாட்-கோர்ட் அம்லோஜிக் செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதனுடன் 1.4ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் மாலி-450 எம்பி2 ஜிபயு வசதியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

XiaoAI  வாய்ஸ் அசிஸ்டென்ட்

XiaoAI வாய்ஸ் அசிஸ்டென்ட்

40-இன்ச் ரெட்மி டிவி மாடல் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் பேட்ச்வால் யுஐ மற்றும் XiaoAI வாய்ஸ் அசிஸ்டென்ட் அம்சத்துடன் வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் மொத்த எடை 6.1கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் 2.0பிளஸ்

டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் 2.0பிளஸ்

புதிய 40-இன்ச் ரெட்மி டிவி ஆனது 2x8W ஸ்பீக்கர்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது, பின்பு2.4GHz வைஃபை, 2 எச்டிஎம்ஐ போர்ட்,
1யுஎஸ்ப போர்ட், 1ஏவி இன்டர்ஃபேஸ், அனலாக் சிக்னல் டிடிஎம்பி இன்டர்ஃபேஸ், ஈதர்நெட் போர்ட்
உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் 2.0பிளஸ்அவுட்டையும் ஆதரிக்கிறது இந்த ரெட்மி டிவி மாடல்.

ஆப் வசதிகளை

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி டிவியில் பல்வேறு ஆப் வசதிகளை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 70-இன்ச் டிவி மாடலை விட சிறந்த அம்சங்களுடன் இந்த 40-இன்ச் டிவி சாதனம் வெளிவந்துள்ளது.

40-இன்ச் டிவி மாடலின் விலை

40-இன்ச் டிவி மாடலின் விலை

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நிறுவனத்தின் 40-இன்ச் டிவி மாடலின் விலை யுவான்(Yuan)999-ஆக உள்ளது. இந்திய விலை மதிப்பில் ரூ.10,059-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இந்தியாவில் ரெட்மி 40-இன்ச் டிவியின் அறிமுகம் பற்றி தகவல் எதுவும் இல்லை, ஒருவேளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றால் உடனே அப்டேட் தருகிறோம்.

Best Mobiles in India

English summary
Redmi TV 40-inch with Full HD screen launched: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X