இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடலின் விலை ரூ.28,999-ஆக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது வரும் பிப்ரவரி 16-ம் தேதி அமேசான், மி.காம் போன்ற பல தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடல் ஆனது 43-இன்ச் 4கே டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவந்துள்து. பின்பு 3840 × 2160 பிக்சல் தீர்மானம், எச்டிஆர் ஆதரவு, டால்பி விஷன் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை
கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி.

இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது 30 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்தஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடல் ஆனது சமீபத்திய பேட்ச்வால் 4 UI வசதியுடன் ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடல் ஆனது குவாட்-கோர் மீடியாடெக் சிப்செட் உடன் Mali G52 GPU ஆதரவும் கொண்டுள்ளது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

இரண்டு எச்டிஎம்ஐ ஸ்லாட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கும் மிக அருமையாக பயன்படும். அதற்கு தகுந்த சிறந்த மென்பொருள் வசதி இவற்றுள் அடக்கம்.

ரெட்மி ஸ்மார்ட் டிவி உடன் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 1.47-இன்ச் டிஸ்பிளே, 194 x 368 பிக்சல் தீர்மானம், இதயத் துடிப்பு மானிட்டர், ஸ்லீப் டிராக்கர் உள்ளிட் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.3,499-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications