Just In
- 10 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- 11 hrs ago
44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!
- 12 hrs ago
விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!
- 13 hrs ago
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
Don't Miss
- News
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : 11.78 லட்சம் பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர் - இது அவசியம்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ரெட்மி ஸ்மார்ட் டிவிகள்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை வரும் அக்டோபர் 20-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இவை ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2022 சீரிஸ் என்று அழைக்கப்படும்.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2022 சீரிஸ்
இந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட் டிவிகளின் டீஸர் படம் சமீபத்தில் வெளியானது எனவே அந்த ஸ்மார்ட் டிவிகள் 120 ஹெர்ட்ஸ் ஹை ரெஃப்ரெஷ் ஆதரவுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2022 சீரிஸ் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2022 சீரிஸ் ஆனது 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் மாடல்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலை சற்று உயர்வாக இருக்கும். அதேபோல் இந்த புதிய ஸமார்ட் டிவி மாடல்கள் எச்டிஆர் 10+ உடன் 4 கே டிஸ்பிள, டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ், டால்பி ஆடியோ, டால்பி விஷன் மற்றும் எம்இஎம்சி போன்ற அம்சங்களுடன் வெளிவரும்.
வரிசையில் நின்னு பில் கட்டியதுலாம் அப்போ- எலெக்ட்ரிக் பில் எளிதாக ஆன்லைனில் கட்டுவது எப்படி?

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2022 மாடல்கள் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களில் பேட்ச்வால் வசதியும் உள்ளது. கூகுள் க்ரோம் காஸ்ட் ஆதரவு, 64-பிட் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர், ஆட்டோ லோ-லேட்டன்சி மோட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2022 மாடல்கள் வெளிவரும். மேலும் இந்நிறுவனம் கடந்த மாதம் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது அதன் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்
32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. அதேபோல் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.25,999-ஆக உள்ளது. மேலும் 32-இன்ச், 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு டிவி 11 இல் இயங்கும் பேட்ச்வால் 4-ஐ அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன. குறிப்பாக ஐஎம்டிபி ஒருங்கிணைப்பு மற்றும் யுனிவர்சல் சர்ச், கிட்ஸ் மோட் மற்றும் லாங்குவேஜ் யுனிவர்ஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

சியோமியின் விவிட் பிக்சர் எஞ்சின் மற்றும் டால்பி ஆடியோ, டிடிஎஸ் மெய்நிகர்: எக்ஸ் ஆதரவு, 20W ஸ்பீக்கர்கள், மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக டால்பி 5.1 சரவுண்ட் ஒலி, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்.

அதேபோல் ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் க்ரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பிரத்யேக கூகிள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் க்யூக் மியூட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய புதிய Mi ரிமோட் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த ரிமோட்டில் ஒரு குயிக் வேக் அம்சமும் அடங்கும். இது ஐந்துவினாடிகளுக்குள் டிவியை இயக்க உதவும் என்று கூறப்படுகிறது. இதுதவிர டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் வி 5.0, லேட்டஸ்ட் மிராக்காஸ்ட் ஆப், ஆட்டோ லோ லேடென்சி மோட், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி 2.0, ஏவி, 3.5mm ஹெட்ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999