அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 98-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்.!
சியோமியின் துணை நிறுவனம் ரெட்மி சீனாவில் தனது புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இப்போது அறமுகம் இந்த 98-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் மாடல் ஆனது வரும் ஏப்ர்ல் 9-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல் விரைவில் அனைத்து இடங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்புடுகிறது, பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

4கே எச்டிஆர் டிஸ்பிளே
ரெட்மி நிறுவனத்தின் புதிய 98-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே எச்டிஆர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும்சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்

எச்டிஆர் 10 ஆதரவு
புதிய 98-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் மாடல் ஆனது MEMC இயக்க தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது,பின்பு எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் டைனமிக் பின்னொளியுடன் 178 டிகிரி கோணத்துடன் காட்சி அமைப்பைக் கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

புளூடூத் குரல் ரிமோட்
ரெட்மி 98-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் பேட்ச்வால் யுஐ ஆதரவைக் கொண்டுள்ளது,பின்பு செயற்கை நுண்ணறிவு குரல் மற்றும் புளூடூத் குரல் ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது இந்த சாதனம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

8ஜிபி உள்ளடக்க மெமரி
98-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் சாதனத்தில் 1.9ஜிகாஹெர்ட்ஸ் அம்லோஜிக் டி972 குவாட்-கோர் பிராசஸர் உடன் மாலி-ஜி31 ஜிபியு ஆதரவு உள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

டால்பி, டிடிஎஸ்
98-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் ஆடியோ வசதி பற்றி பேசுகையில், டால்பி, டிடிஎஸ் உள்ளிட்ட ஆதரவுகளுடன் 4பெரிய ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது, குறிப்பாக இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட் டிவியில் வைஃபை 802.11 ஏசி ( (2.4GHz / 5GHz), புளூடூத் 4.2, 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், எஸ் /பி.டி.ஐ.எஃப் மற்றும் ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

19999 யுவான்
98-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் மாடலின் விலை 19999 யுவான் ஆக உள்ளது, இந்திய மதிப்பில் ரூ.2,15,400-ஆகஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications