Home
Gadgets

100 இன்ச் டிவியை இறக்கிவிட்ட Redmi.. 64ஜிபி மெமரி.. 30W ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்? என்ன விலை?

எல்ஜி, சாம்சங், சோனி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது ரெட்மி (Redmi) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனம் புதிய 100 இன்ச் டிவியை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ரெட்மி நிறுவனம் இப்போது ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் 100 இன்ச் 2026 (Redmi Smart TV MAX 100-inch 2026 ) மாடலை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த ரெட்மி 100 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய டிவியின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

100 இன்ச் டிவியை இறக்கிவிட்ட Redmi.. 64ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ரெட்மி 100 இன்ச் ஸ்மார்ட் டிவி மேக்ஸ் 2026 அம்சங்கள் (Redmi 100-inch Smart TV MAX 2026): 4K ரெசல்யூஷன் (4K resolution) கொண்ட பேனல் உடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 600 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

இந்த 100 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது ஃபைவ்-கோர் ஏ55 பிராசஸர் (five-core A55 processor) உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் மேம்பட்ட கேமிங் அம்சங்களும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவியில் உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் ரெட்மி 100 இன்ச் ஸ்மார்ட் டிவி மேக்ஸ் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

30W ஸ்பீக்கர்கள் உடன் ரெட்மி 100 இன்ச் ஸ்மார்ட் டிவி மேக்ஸ் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 100 இன்ச் ஸ்மார்ட் டிவி மேக்ஸ் 2026 மாடலின் விலை 8799 Yuan (இந்திய மதிப்பில் ரூ.1,18,614)-ஆக உள்ளது. மேலும் ரெட்மி 100 இன்ச் டிவியுடன் 85-இன்ச் டிவி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 85-இன்ச் டிவி 20W ஸ்பீக்கர்கள் மற்றும் 3ஜிபி ரேம் வசதியுடன் வெளிவந்துள்ளது.

100 இன்ச் டிவியை இறக்கிவிட்ட Redmi.. 64ஜிபி மெமரி.. எந்த மாடல்?

குறிப்பாக இந்த ரெட்மி 85-இன்ச் டிவியின் விலை 4,899 Yuan (இந்திய மதிப்பில் ரூ.66,040)-ஆக உள்ளது. விரைவில் இந்த இரண்டு டிவிகளும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

அதுவும் இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் டிவிகள் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்த புதிய 100 இன்ச் ரெட்மி டிவி இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photos credit: redmi, gizmochina, gadgets360

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Smart TV MAX 100 inch 2026 launched in China: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X