70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்த Redmi: நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட் விலை
ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ70
இந்நிலையில் ரெட்மி நிறுவனம்புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ70 (Redmi Smart TV A70) மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது இந்த 70-இன்ச் ரெட்மி டிவி.

அதேபோல் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி தற்போது சீனாவில் மட்டுமே தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட் டிவி அனைத்துநாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்களை சற்றுவிரிவாகப் பார்ப்போம்.

3840x2160 பிக்சல்ஸ்
70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ70 மாடல் ஆனது 4கே டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் 3840x2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 95% screen-to-body ratio உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குவாட்-கோர் ஏ35 பிராசஸர்
புதிய 70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ70 மாடலில் குவாட்-கோர் ஏ35 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ரெட்மி ஸ்மார்ட்டிவி. அதேபோல் MIUI TV மூலம் இயங்குகிறது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்.

8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
குறிப்பாக 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த டிவி Xiaomi TV Assistant ஆப் வசதியுடன் வெளிவருகிறது. எனவே பயனர்கள் இந்த டிவியை ஸ்மார்ட்போன் மூலம் இயக்க
முடியும்.

புதிய 70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ70 மாடல் வாய்ஸ் கண்ட்ரோல், channel switching, intelligent screen projection,டிவி ஸ்கிரீன் ஷாட்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான வசதிகளை வழங்குகிறது என்றே கூறலாம்.

20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்
இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் vivid சவுண்ட் குவாலிட்டி-ஐ வழங்குகிறது. எனவே ஒரு தியேட்டர் அனுபவத்தை பெறமுடியும். பின்பு இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவியின் விலை
வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த 70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவியின் விலை 2,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.34.245) ஆக உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications