Redmi அறிமுகம் செய்த புதிய 50 இன்ச் 4K டிவி.. 32ஜிபி மெமரி.. ட்ரூ டோன் டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?
சியோமி நிறுவனம் புதிய ரெட்மி ஏ50 எனர்ஜி எஃபிஷியன்சி லெவல் 1 எடிஷன் (Redmi A50 Energy Efficiency Level 1 Edition) ஸ்மார்ட் டிவி மாடலை இப்போது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது குவாட் கோர் பிராசஸர், 32ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி ஏ50 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Redmi Smart TV A50 Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே உடன் ரெட்மி ஏ50 ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 × 2160 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவியில் ட்ரூ டோன் டிஸ்பிளே டெக்னாலஜி (True Tone display technology), backlighting கன்ட்ரோல் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த டிவியில் உள்ளன. இந்த ரெட்மி டிவியில் மேம்பட்ட கேமிங் அம்சங்களும் உள்ளது.
தரமான குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ-35 பிராசஸர் (quad-core Cortex-A35 processor) உடன் ரெட்மி ஏ50 ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்தின் வழங்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உடன் ரெட்மி ஏ50 ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். Xiaomi Surge OS மூலம் இந்த டிவி இயங்குகிறது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் போலவே அனைத்து புதிய அம்சங்களையும் அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும்.
10W டூயல் ஸ்பீக்கர்கள் உடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் இந்த டிவி மொத்தமாக 20W சவுண்ட் அவுட்புட் வழங்கும். இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவயில் உள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த புதிய ரெட்மி டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும்.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன்ட்புட், ஈதர்நெட் லேன், S/PDIF ஆடியோ அவுட்புட், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி 50 இன்ச் டிவியில் உள்ளன. மேலும் இதில் கேமிங் கன்சோல்கள், PCs, சவுண்ட்பார்கள் மற்றும் ஸ்டோரேஜ் டிவைஸ் போன்ற சாதனங்களை இணைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரெட்மி ஏ50 எனர்ஜி எஃபிஷியன்சி லெவல் 1 எடிஷன் (Redmi A50 Energy Efficiency Level 1 Edition) ஸ்மார்ட் டிவி மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவி அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த ரெட்மி 50 இன்ச் டிவியின் விலை 1399 yuan (இந்திய மதிப்பில் ரூ.18,742)-ஆக உள்ளது.
குறிப்பாக இந்த ரெட்மி டிவி விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரமான பிராஸசர், 32ஜிபி மெமரி, 4கே டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் வெளிவருவதால் நல்ல வரவேற்பு இருக்கும்.
photos credits: gagadget.com, xiaomi, ithome


Click it and Unblock the Notifications








