Home
Gadgets

அதிரவிட்ட Redmi.. பட்ஜெட் விலை.. 64ஜிபி ஸ்டோரேஜ்.. 4K டிஸ்பிளே..அறிமுகமானது புதிய ஸ்மார்ட் டிவிகள்..

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ ப்ரோ 75 சீரிஸ் (Redmi Smart TV A Pro 75 series) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச், 70 இன்ச், 75 இன்ச் ஆகிய ஆறு அளவுகளில் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த டிவிகள் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ ப்ரோ 75 மாடல்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ ப்ரோ 75 அம்சங்கள் (Specifications of Redmi Smart TV A Pro 75): 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச், 70 இன்ச், 75 இன்ச் ஆகிய டிவி மாடல்கள் 4கே ரெசல்யூஷன் (4K resolution) மற்றும் 3840×2160 பிக்சல்ஸ் ஆதரவுகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 அதிரவிட்ட Redmi.. பட்ஜெட் விலை.. அறிமுகமானது புதிய ஸ்மார்ட் டிவிகள்..

94 சதவீதம் டிசிஐ-பி3 கலர் காமட் சப்போர்ட் (94% DCI-P3 color gamut support) 1.07 பில்லியன்ஸ் கலர்ஸ் ( 1.07 billion colors) 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளன ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ ப்ரோ 75 சீரிஸ். அதேபோல் இந்த டிவிகளில் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology)ஆதரவும் உள்ளது.

எனவே இந்த டிவிகளில் மிகவும் தெளிவான படங்களை பார்க்க முடியும். குறிப்பாக குவாட்-கோர் பிராசஸர் ( quad-core processor) உடன் இந்த புத்தம் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ ப்ரோ 75 சீரிஸ் மாடல்கள் வெளிவந்துள்ளன. இந்த டிவிகளுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவிகளில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரகளுடன் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ ப்ரோ 75 சீரிஸ் மாடல்கள் வெளிவந்துள்ளன. எனவே இந்த ரெட்மி டிவிகள் சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் திறமையான மல்டிடாஸ்கிங்கை (Multitasking) வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். குறிப்பாக இந்த டிவிகளின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

NFC ரிமோட் கண்ட்ரோல் ஆதரவுகளுடன் இந்த புத்தம் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ ப்ரோ 75 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதுவும் இது ஒன்-டச் ஸ்கிரீன் ப்ரொஜெக்ஷனை ஆதரிக்கிறது. இதுதவிர பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவிகளின் ரிமோட். அதேபோர் தரமான ஆடியோ வசதியுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன.

அதன்படி பில்ட்-இன் டூயல் ஸ்பீக்கர்களை (built-in dual speakers) கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ ப்ரோ 75 சீரிஸ் மாடல்கள். குறிப்பாக இந்த டிவிகளின் ஸ்பீக்கர்கள் டிடிஎஸ் டிகோடிங் மூலம் அதிவேக ஆடியோவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே புதிய ரெட்மி டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 அதிரவிட்ட Redmi.. பட்ஜெட் விலை.. அறிமுகமானது புதிய ஸ்மார்ட் டிவிகள்..

Xiao AI அசிஸ்டண்ட் ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி டிவிகள் வெளிவந்துள்ளன.இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ஏவி இன்புட், வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய டிவிகள் பல ஸ்மார்ட் அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. ஆனாலும் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ ப்ரோ 75 சீரிஸ் ஆனது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவிகள் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும்.

ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ ப்ரோ 75 சீரிஸ் விலை

43-இன்ச் டிவியின் விலை 1599 yuan (இந்திய மதிப்பில் ரூ.18,890)
50-இன்ச் டிவியின் விலை 1899 yuan (இந்திய மதிப்பில் ரூ.22,499)
55-இன்ச் டிவியின் விலை 2099 yuan (இந்திய மதிப்பில் ரூ.24,850)
65-இன்ச் டிவியின் விலை 2799 yuan (இந்திய மதிப்பில் ரூ.33,077)
70-இன்ச் டிவியின் விலை 3299 yuan (இந்திய மதிப்பில் ரூ.39,038)
75-இன்ச் டிவியின் விலை 3799 yuan (இந்திய மதிப்பில் ரூ.44,915)

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Smart TV A Pro 75 with 4K Display launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X