Home
Gadgets

ஆகஸ்ட் 29: மிரட்டலான 70-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்: என்ன விலை? அம்சங்கள்.!

சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி அதன் முதல் ஸ்மார்ட் டிவியை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களை விட புதிய தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸமார்ட் டிவி களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 29: மிரட்டலான 70-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்: என்ன விலை?

சியோமி நிறுவனம் மற்றும் ரெட்மி நிறுவனம் 2019 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ரெட்மி நிறுவனம் அண்மையில் அதன் பிராண்டின் கீழ் பல புதிய ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்திருந்தது.

ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம்

ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம்

வெய்போ தளம் வழியாக வெளியான டீஸரின் அடிப்படையில் ரெட்மி டிவி வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பின்பு இது 70-இன்ச் ஸ்மார்ட் டிவி என அந்நிறுவனம் சார்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

 பேட்ச்வால் யுஐ கொண்டு இயங்கும்

பேட்ச்வால் யுஐ கொண்டு இயங்கும்

மேலும் இந்த ரெட்மி ஸடமார்ட் டிவி ஆனது பேட்ச்வால் யுஐ கொண்டு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இது 4கே எச்டிஆர் அதரவு, டால்பி சவுண்ட் ஆதரவு மற்றும் தொகுக்கப்பட்ட ப்ளூடூத் வாய்ஸ் ரிமோட்
வசதிகளுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சீனாவில் 3சி தரச்சான்றிதழை  பெற்றது

சீனாவில் 3சி தரச்சான்றிதழை பெற்றது

குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு ரெட்மி டிவி மாடல் எல்70எம்5 என்கிற பெயரின் கீழ் சீனாவில் 3சி தரச்சான்றிதழை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியான டீஸர் மற்றும் மேலே குறிப்பிப்பட்டுள்ள மாடல் எண்ணைப் பார்த்தால், இது இரண்டுமே ஒரே தயாரிப்பாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 சியோமி நிறுவனம்

சியோமி நிறுவனம்

ஏற்கனவே சியோமி நிறுவனம் இந்தியா மற்றும் சீனாவிலும் டிவி விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது, பின்பு அதன் வழியை ரெட்மியும் பின்பற்றும் பட்சத்தில், ரெட்மி டிவிக்கள் வெற்றி பெற வலுவான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சியோமி 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ரூ.52,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது, எனவே ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடலும் ரூ.52,000-க்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரும்

ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும்

ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும்

அதேசமயம் ரெட்மி ஸ்மார்ட் டிவியுடன் ரெட்மி 8 மற்றும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியா முழுலதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Smart TV 70 inch Official Photo Revealed ahead of Launch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X