பட்ஜெட் விலையில் புதிய 32-இன்ச், 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.! தரமான அம்சங்கள்.!

|

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய 32-இன்ச், 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் இன்று (செப்டம்பர் 22) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் டால்பி ஆடியோ, ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட் டிவிகளின் விலை

புதிய ஸ்மார்ட் டிவிகளின் விலை

புதிய 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.25,999-ஆக உள்ளது. பின்பு அமேசான், Mi.com, Mi Home ஸ்டோர்களில் விற்பனைக்குவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையில் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் சலுகை விலையில் கிடைக்கும் என சியோமி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது புதிய 32-இன்ச், 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களின் சிறப்பு அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

 32-இன்ச், 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி

புதிய 32-இன்ச், 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு டிவி 11 இல் இயங்கும் பேட்ச்வால் 4-ஐ அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன. மேலும் ஐஎம்டிபி ஒருங்கிணைப்பு மற்றும் யுனிவர்சல் சர்ச், கிட்ஸ் மோட் மற்றும் லாங்குவேஜ் யுனிவர்ஸ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு வருகிறது இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள்.

வழக்கறிஞர் பாக்கெட்டில் வெடித்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ் பளீர் பதில்- என்ன நடந்தது?வழக்கறிஞர் பாக்கெட்டில் வெடித்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ் பளீர் பதில்- என்ன நடந்தது?

 ஸ்மார்ட் டிவிகளில் சியோமியின்

இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளில் சியோமியின் விவிட் பிக்சர் எஞ்சின் மற்றும் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் மெய்நிகர்: எக்ஸ் ஆதரவுடன் வெளிவந்துள்ளன. மேலும் 20W ஸ்பீக்கர்கள் கொண்டு வெளிவந்துள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள். கூடுதலாக, மேம்பட்ட ஆடியோ
அனுபவத்திற்காக டால்பி 5.1 சரவுண்ட் ஒலி ஆதரவைக் கொண்டுள்ளது 32-இன்ச், 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவிகள்.

ஆப்பிள் ஐபோன் 'மினி' சகாப்தம் முடிவடைகிறதா? இனி அப்பிளில் மினி வெர்ஷன் கிடையாதா? என்னப்பா சொல்றீங்க?ஆப்பிள் ஐபோன் 'மினி' சகாப்தம் முடிவடைகிறதா? இனி அப்பிளில் மினி வெர்ஷன் கிடையாதா? என்னப்பா சொல்றீங்க?

 அறிமுகம் செய்துள்ள புதி

ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் க்ரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் புதிய ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பிரத்யேக கூகிள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் க்யூக் மியூட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய புதிய Mi ரிமோட் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த ரிமோட்டில் ஒரு குயிக் வேக் அம்சமும் அடங்கும். இது ஐந்து வினாடிகளுக்குள் டிவியை இயக்க உதவும் என்று கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை: அமேசான் லஞ்ச விவகாரம்- என்ன நடந்தது., எவ்வளவு தொகை?சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை: அமேசான் லஞ்ச விவகாரம்- என்ன நடந்தது., எவ்வளவு தொகை?

ர்ட் டிவி மாடல்களில் வய

புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களில் வயர்லெஸ் இணைப்பு விருப்பங்களில் டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் வி 5.0 ஆகியவை அடங்கும். மேலும் லேட்டஸ்ட் மிராக்காஸ்ட் ஆப், ஆட்டோ லோ லேடென்சி மோட் போன்ற அம்சங்களும் இந்த சாதனங்களில் இடம்பெற்றுள்ளன. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?

ச்டிஎம்ஐ போர்ட்,இரண்டு யுஎஸ்பி 2.

இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்,இரண்டு யுஎஸ்பி 2.0, ஏவி, 3.5mm ஹெட்ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனங்கள். குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

Photo Credit: mi.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Smart TV 32, Smart TV 43 With Dolby Audio Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X