Home
Gadgets

செப்டம்பர் 22: தரமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவிகள்.!

ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகளும் இந்தியாவில் அதிகளவு விற்பனை செயப்படுகிறது. இந்நிலையில் ரெட்மி வரும் செப்டம்பர் 22-ம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசைட்டின் தகவலின்படி, 32 இன்ச் மற்றும்

மைக்ரோசைட்டின் தகவலின்படி, 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவிகள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இந்த டிவியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக புதிய ரெட்மி
ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிநவீன அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின்படி புதிய ரெட்மி 32-இன்ச்,

வெளிவந்த தகவலின்படி புதிய ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை சுற்றி மெலிதான பெஸல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இன்-ஹவுஸ் இமேஜ் ப்ராசஸிங் தொழில்நுட்பம், விவிட் பிக்சர் எஞ்சின் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள். அதேபோல் இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட பேட்ச்வால் 4 உடன் இயங்கும் இந்த புதிய ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள். அதேபோல் மீடியாடெக் சிப்செட் வசதிகளுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவிகள் ஆனது டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் எக்ஸ் ஆடியோ ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு ஆட்டோ லோ லேடென்சி பயன்முறையையும் கொண்டிருக்கும் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள். அதேபோல் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வைஃபை, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட

டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள். அதேபோல் விரைவில் வரும் ரெட்மி ஸ்மார்ட் டிவி சீரிஸ் ஆனது ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரீஸுக்குப் பிறகு ரெட்மியில் இருந்து இந்தியாவிற்கு வரும் இரண்டாவது டிவி தொடராக இருக்கும்.

ரெட்மி 10 பிரைம்

ரெட்மி 10 பிரைம்

அதேபோல் இந்நிறுவனம் சமீபத்தில் பட்ஜெட் விலையில் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இப்போது இந்த சாதனத்தின் அம்சங்களைப் பார்ப்போம். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10
பிரைம்.

ரெட்மி 10 பிரைம்

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. எனவே இந்த கேமராக்கள் உதவியுடன் துல்லியமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பிசெல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம். புதிய ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக Astral White, Bifrost White மற்றும் Phantom Black நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும்9W reverse சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது

Best Mobiles in India

English summary
Redmi Smart TV 32 and 43-inches with 20W speakers Launching in India on September 22: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X