ஆர்டர் தூள் பறக்க போகுது.. 33W ஸ்பீக்கர்கள்.. 8GB ஸ்டோரேஜ்.. அறிமுகமானது புதிய Redmi 4கே டிவிகள்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் இந்தியாவில் இன்று ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே (Redmi Smart Fire TV 4K) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த தனித்துவமான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. இப்போது ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல்களின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே அம்சங்கள் (Redmi Smart Fire TV 4K Specifications): ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே ஆனது 43 இன்ச், 55 இன்ச் என இரு அளவுகளில் வாங்கக் கிடைக்கும். குறிப்பாக 4கே டிஸ்பிளே (4K display), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த புதிய
ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல்களில் உள்ளன.
ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 43 இன்ச், 55 இன்ச் மாடல்கள் ஆக்டோ-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-core Cortex A55 processor) உடன் வெளிவந்துள்ளன. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவிகளின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ஃபயர் ஓஎஸ் 7 (Fire TV OS 7) மூலம் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல்கள் இயங்கும். அதேபோல் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன.
அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் மியூசிக்கிற்கான ஷார்ட்கட் பட்டன்கள் கொண்டுள்ளது இந்த டிவிகளின் ரிமோட். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 43 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடல்கள் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவிகளில் உள்ளன. பின்பு இந்த டிவிகளின் ஆடியோ வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

அதன்படி டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் (DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த புதிய டிவிகள். ஆனால் 43-இன்ச் 24W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. 55-இன்ச் டிவி 33W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 43-இன்ச் டிவியின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. பின்பு இதன் 55-இன்ச் மாடலின் விலை ரூ.35,999-ஆக உள்ளது. வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் இந்த டிவிகள் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவிகளை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.23,499 விலையில் இந்த டிவியை வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications