செப்டம்பர் 16 வரை எந்த டிவி மாடலையும் வாங்காதீங்க.. டால்பி ஆடியோ.. வருகிறது Redmi 4கே டிவி.. எந்த மாடல்?
ரெட்மி (Redmi) நிறுவனம் தனது புதிய 4கே ஸ்மார்ட் டிவிகளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல்களை தான் அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம். குறிப்பாக இந்த டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவரும். இப்போது இந்த டிவிகளின் அறிமுக தேதி மற்றும் ஆன்லைனில் கசிந்த அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே அம்சங்கள் (Redmi Smart Fire TV Specifications): ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே ஆனது 55 இன்ச் மற்றும் 43 இன்ச் என இரண்டு அளவுகளில் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் ரெட்மி நிறுவனம் 55 இன்ச் ஃபயர் டிவி மாடலை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும். குறிப்பாக இந்த 55 இன்ச் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) கொண்டுள்ளது ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல். அதேபோல் 4கே எச்டிஆர் (4K HDR) ஆதரவுடன் இந்த டிவிகள் வெளிவரும் என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபயர் ஓஎஸ் 7 (Fire TV OS 7) மூலம் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஓஎஸ் பல அசத்தலான புதிய அம்சங்களை வழங்கும் என நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும்.
குவாட்-கோர் பிராசஸர் உடன் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 55-இன்ச் மற்றும் 43-இன்ச் மாடல்கள் அறிமுகமாகும். இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் தரமான கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த புதிய ரெட்மி டிவிகள் அறிமுகமாகும். எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவிகளை நம்பி வாங்கலாம்.
3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த புதிய ரெட்மி டிவிகள் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் இந்த டிவிகளின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் (DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களும் புதிய ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல்களில் உள்ளது. எனவே இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். அதேபோல் தரமான ஸ்பீக்கர்கள் உடன் இந்த டிவிகள் வெளிவரும்.

வைஃபை, ஏர்ப்ளே, மிராகாஸ்ட், புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புத்தம் புதிய ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். இதுதவிர பல மேம்பட்ட வசதிகள் இந்த புதிய ரெட்மி டிவிகளில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 55-இன்ச் மற்றும் 43-இன்ச் மாடல்கள் (Redmi Smart Fire TV 4K 55 and 43) வரும் செப்டம்பர் 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த இரண்டு டிவி மாடல்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications