Home
Gadgets

4K டிஸ்பிளே.. 24W ஸ்பீக்கர்கள்.. பட்ஜெட் விலை.. விற்பனைக்கு வருகிறது புது ரெட்மி டிவி.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கம்மி விலையில் அசத்தலான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் சமீபத்தில் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியை (Redmi Smart Fire TV 4K 43) அறிமுகம் செய்தது.

இந்நிலையில் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது ரெட்மி நிறுவனம். அதாவது வரும் செப்டம்பர் 29-ம் தேதி 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமேசான் மற்றும் MI.காம் தளங்களில் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும்.

பட்ஜெட் விலை.. விற்பனைக்கு வருகிறது புது ரெட்மி டிவி.. எந்த மாடல்?

இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ரூ.24,999-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1250 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த டிவிக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 3840 x 2160 பிக்சல்ஸ், ஆட்டோ லோ லேட்டன்சி மோட், 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவியின் டிஸ்பிளே. மேலும் இந்த ரெட்மி டிவியில் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) தொழில்நுட்ப வசதியும் உள்ளது.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் தியேட்டர் அனுபவத்தை வழங்கும் இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. குறிப்பாக மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த புதிய டிவி. மேலும் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

பட்ஜெட் விலை.. விற்பனைக்கு வருகிறது புது ரெட்மி டிவி.. எந்த மாடல்?

குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-Core Cortex A55 processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. மேலும் கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு (Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

ஃபயர் ஓஎஸ் 7 மூலம் இயங்குகிறது இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. அதேபோல் இந்த டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. குறிப்பாக நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5, சோனிலிவ், யூடியூப் போன்ற பல்வேறு ஆப்ஸ்களை இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

அலெக்ஸா வாய்ஸ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கொண்டுள்ளது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. எனவே வாய்ஸ் அசிஸ்டண்ட் கொண்ட இந்த ரிமோட் ஆதரவுடன் டிவியை அருமையாக இயக்க முடியும். அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் மியூசிக் ஆகியவற்றுக்கான ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ஸ்மார்ட் ரிமோட்.

பட்ஜெட் விலை.. விற்பனைக்கு வருகிறது புது ரெட்மி டிவி.. எந்த மாடல்?

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் ( DTS: Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் இந்த அதிநவீன ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே 2, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Smart Fire TV 4K 43 will go on sale in India on September 29: check specifications, price, offer : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X