செப்டம்பர் 15 வரை எந்த டிவியும் வாங்காதீங்க.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. 2ஜிபி ரேம்.. வருகிறது ரெட்மி டிவி.. எந்த மாடல்
ரெட்மி நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதாவது சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை விட ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் கம்மி விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்நிலையில் ரெட்மி நிறுவனம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி இந்தியாவில் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியை (Redmi Smart Fire TV 4K 43) அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 43-இன்ச் டிவியும் வர உள்ளது. குறிப்பாக 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி தற்போது ரூ.11,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலும் இந்தியாவில் கம்மி விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடல் உடன் 50-இன்ச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் வெளியான 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்களைப் பார்ப்போம்.
அதாவது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது 4கே டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். மேலும் டால்பி ஆடியோ, டிடிஎஸ்-எச்டி, டிடிஎஸ்-விர்ச்சுவல் உள்ளிட்ட பல்வேறு ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது சிறந்த ஆடியோ அம்சத்தை வழங்கும்.
மீடியாடெக் எம்டி9020 பிராசஸர் (MediaTek MT9020 ) மற்றும் மாலி ஜி52 எம்பி2 ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த 43-இன்ச் ரெட்மி டிவி இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது எம்ஐ.காம் மற்றும் அமேசானில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகமான 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி (1366×768 பிக்சல்கள்) எச்டி ரெடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 178 டிகிரி வியூ ஆங்கிள், விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோல் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம், 96.9 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேசியோ கொண்டுள்ளது.
இதுவொரு மெட்டல் பெசல் லெஸ் ஸ்கிரீன் கொண்ட டிவியாகும். இந்த டிவியில் ஃபயர் ஓஎஸ் 7 (Fire OS 7) கொண்ட குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ35 (Quad Core Cortex A35) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 1 ஜிபி ரேம் + 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.

ரெட்மி வாய்ஸ் ரிமோட் (Redmi Voice Remote) வருகிறது. இந்த ரிமோட்டில் அலெக்சா (Alexa), பிளே பேக் கன்ட்ரோல் (Play Back Controls), சேனல் அப்/டவுன், மியூட் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் மியூசிக் (Amazon Prime Music) ஆகியவற்றின் சார்ட்கட் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.
10W கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் - எச்டி (DTS-HD), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual:X) சப்போர்ட் வருகிறது. மேலும், ஏர்பிளே (AirPlay), மிராகாஸ்ட் (Miracast), ப்ளூடூத் 5.0, வை-பை 802.11 ஏசி போன்ற கனெக்டிவிட்டி இருக்கிறது. அதோடு ஒரு எச்டிஎம்ஐ போர்ட், 3 யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எதர்நெட் (Ethernet), ஆன்டெனா (Antenna) வருகிறது.


Click it and Unblock the Notifications








