16ஜிபி ஸ்டோரேஜ்.. 2ஜிபி ரேம்.. கம்மி விலை.. நாளைக்கு லான்ச் ஆகும் 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியை அறிமுகம் செய்த நிலையில் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது செப்டம்பர் 15-ம் தேதி (நாளை) இந்தியாவில் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது கம்மி விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியடன் 50-இன்ச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளும் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஆன்லைனில் கசிந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது 4கே டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். மேலும் டால்பி ஆடியோ, டிடிஎஸ்-எச்டி, டிடிஎஸ்-விர்ச்சுவல் உள்ளிட்ட பல்வேறு ஆடியோ அம்சங்களைக் கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ரெட்மி ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மீடியாடெக் எம்டி9020 (MediaTek MT9020) பிராசஸர் மற்றும் மாலி ஜி52 எம்பி2 ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. குறிப்பாக கம்மி விலையில் இந்த 43-இன்ச் டிவி வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி (1366×768 பிக்சல்கள்) எச்டி ரெடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 178 டிகிரி வியூ ஆங்கிள், விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோல் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம், 96.9 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேசியோ கொண்டுள்ளது.
இதுவொரு மெட்டல் பெசல் லெஸ் ஸ்கிரீன் கொண்ட டிவியாகும். இந்த டிவியில் ஃபயர் ஓஎஸ் 7 (Fire OS 7) கொண்ட குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ35 (Quad Core Cortex A35) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 1 ஜிபி ரேம் + 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.
ரெட்மி வாய்ஸ் ரிமோட் (Redmi Voice Remote) வருகிறது. இந்த ரிமோட்டில் அலெக்சா (Alexa), பிளே பேக் கன்ட்ரோல் (Play Back Controls), சேனல் அப்/டவுன், மியூட் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் மியூசிக் (Amazon Prime Music) ஆகியவற்றின் சார்ட்கட் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.

10W கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் - எச்டி (DTS-HD), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual:X) சப்போர்ட் வருகிறது. மேலும், ஏர்பிளே (AirPlay), மிராகாஸ்ட் (Miracast), ப்ளூடூத் 5.0, வை-பை 802.11 ஏசி போன்ற கனெக்டிவிட்டி இருக்கிறது. அதோடு ஒரு எச்டிஎம்ஐ போர்ட், 3 யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எதர்நெட் (Ethernet), ஆன்டெனா (Antenna) வருகிறது.
அதேபோல் இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை விட மேம்பட்ட அம்சங்களுடன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








