புது ரெட்மி 4K ஸ்மார்ட் டிவியை ஆஃபர்ல தூக்கலாம்.. 8GB ஸ்டோரேஜ்.. 24W ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
இந்தியாவில் மிகவும் பிரபலமானது ரெட்மி நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு தான் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியை (Redmi Smart Fire TV 4K 43) அறிமுகம் செய்தது ரெட்மி நிறுவனம். தற்போது அமேசானில் இந்த ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி முன்பு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் அமேசான் தளத்தில் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலை ரூ.22,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். இப்போது இந்த டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. பின்பு 3840 x 2160 பிக்சல்ஸ், ஆட்டோ லோ லேட்டன்சி மோட், 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவியின் டிஸ்பிளே. மேலும் இந்த ரெட்மி டிவியில் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) தொழில்நுட்ப வசதியும் உள்ளது.
குறிப்பாக மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த புதிய டிவி. மேலும் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம். மேலும் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அசத்தலான 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-Core Cortex A55 processor) வசதியைக் கொண்டுள்ளது . மேலும் கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு (Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் பயர் ஓஎஸ் 7 மூலம் இயங்குகிறது இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. இந்த டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. குறிப்பாக நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5, சோனிலிவ், யூடியூப் போன்ற பல்வேறு ஆப்ஸ்களை இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி அலெக்ஸா வாய்ஸ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கொண்டுள்ளது. எனவே வாய்ஸ் அசிஸ்டண்ட் கொண்ட இந்த ரிமோட் ஆதரவுடன் டிவியை அருமையாக இயக்க முடியும். அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் மியூசிக் ஆகியவற்றுக்கான ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ஸ்மார்ட் ரிமோட்.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் ( DTS: Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் இந்த அதிநவீன ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம்.
மேலும் வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே 2, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட் பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் சற்று குறைந்த விலையில் இந்த புதிய ரெட்மி டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








