Home
Gadgets

ரெட்மி 43-இன்ச் 4K டிவி இந்தியாவில் அறிமுகம்.. 24W ஸ்பீக்கர்கள்.. விலையை கேட்டால் இப்பவே வாங்குவீங்க..

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியை (Redmi Smart Fire TV 4K 43) அறிமுகம் செய்துள்ளது. இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி ஆனது பட்ஜெட் விலையில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 3840 x 2160 பிக்சல்ஸ், ஆட்டோ லோ லேட்டன்சி மோட், 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவியின் டிஸ்பிளே. மேலும் இந்த ரெட்மி டிவியில் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) தொழில்நுட்ப வசதியும் உள்ளது.

24W ஸ்பீக்கர்கள்.. ரெட்மி 43-இன்ச் 4கே டிவி இந்தியாவில் அறிமுகம்..

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தியேட்டர் அனுபவத்தை வழங்கும் இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. குறிப்பாக மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த புதிய டிவி. மேலும் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

குறிப்பாக குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-Core Cortex A55 processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. மேலும் கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு (Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

ஃபயர் ஓஎஸ் 7 மூலம் இயங்குகிறது இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. அதேபோல் இந்த டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. குறிப்பாக நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5, சோனிலிவ், யூடியூப் போன்ற பல்வேறு ஆப்ஸ்களை இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

அலெக்ஸா வாய்ஸ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கொண்டுள்ளது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. எனவே வாய்ஸ் அசிஸ்டண்ட் கொண்ட இந்த ரிமோட் ஆதரவுடன் டிவியை அருமையாக இயக்க முடியும். அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் மியூசிக் ஆகியவற்றுக்கான ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ஸ்மார்ட் ரிமோட்.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் ( DTS: Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் இந்த அதிநவீன ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

24W ஸ்பீக்கர்கள்.. ரெட்மி 43-இன்ச் 4கே டிவி இந்தியாவில் அறிமுகம்..

வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே 2, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட் பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. குறிப்பாக 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் ரூ.35,000-க்கு மேல் தான் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ரூ.26,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியை ரூ.24,999 விலையில் வாங்கலாம் என நிறுவனம் கூறியுள்ளது. இதன் விற்பனை தேதியை குறிப்பிடவில்லை ரெட்மி நிறுவனம். ஆனாலும் வரும் பண்டிகை காலங்களில் இந்த டிவி எம்ஐ.காம் மற்றும் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Redmi Smart Fire TV 4K 43 has been launched in India at a price of Rs.24,999: check specifications, Sale Date : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X